நான் முதல்வரானால்…? சர்க்கார் விழாவில் முழங்கிய விஜய்! பேய் வேக சந்தோஷத்தில் ரசிகர்கள்!

3

“உழைச்சாதான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும். ஜெயிச்ச்சுடவே கூடாதுன்னு ஒரு கூட்டம் வேலை செய்யுது. உசுப்பேத்துறவன்ட்ட உம்முன்னு இரு. கடுப்பேத்துறவன்ட்ட கம்முன்னு இரு. வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். நான் அப்படிதான் இருக்கேன் இப்போ”.

“தேர்தலில் ஜெயிச்ச பிறகுதான் சர்க்கார் அமைப்பாங்க. நாங்க சர்க்கார் அமைச்சுட்டு தேர்தலில் நிற்போம்”. இப்படியெல்லாம் யார் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? சாட்சாத் விஜய்தான்.

இன்று சென்னையில் நடந்த சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசி கூட்டத்தை மிரள விட்டுவிட்டார் விஜய். இப்படியெல்லாம் அவர் வெளிப்படையாக பேசுகிற ஆள் இல்லையே? அதுவும் அஜீத் ரசிகர்களை உரசி, ஆளுங்கட்சியை இடித்து, தன் எதிர்கால எண்ணத்தையும் பப்ளிக்காக போட்டு உடைத்து… பிரமாதப்படுத்திவிட்டார் விஜய்.

அதற்கப்புறம் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நடிகர் பிரசன்னா, நீங்க முதல்வராகிட்டா உங்க முதல் திட்டம் என்ன? என்று ஒரு விவகாரமான கேள்வியை போட, எதற்கும் தயாராக வந்திருந்த விஜய்யை அந்த பாலையும் சிக்சர் அடித்துத் தள்ளினார்.

‘சர்கார்’ படத்தில் நான் முதல்வரா நடிக்கல. ஆனால் நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன். குடி எவ்வழியோ, மக்களும் அவ்வழியேன்னு சொல்வாங்க. ஒரு ராஜா தன் சேவகன்ட்ட சொன்னான். “அந்தக் கடையில் போய் உப்பு என்ன விலைன்னு கேட்டுட்டு வா” என்று. “உப்பு வேணும்னா கொஞ்சம் எடுத்துக்க வேண்டியதுதானே? எதுக்கு விலை கேட்கணும்” என்றான் சேவகன். அதுக்கு ராஜா சொன்னார். “ராஜாவே ஓசியில் எடுத்துட்டு போறாரு. நாம எடுத்தா என்ன தப்புன்னு ஜனங்க நினைப்பாங்க. அதனால் ராஜாவாகிய நான் ஒழுங்கா நடந்துக்கணும்”னு சொன்னார்.

அதோடு விட்டாரா? அடிபட்டு நசுங்கி வதைபட்டு ஒருத்தன் முதல்வரா வந்த பின்னாடி ஒரு சர்க்கார் அமையும் பாருங்க. அதுதான் சர்க்கார் என்று கூற, ரசிகர்களின் பேய் கூச்சலில் ஆடிப்போனது ஆடிட்டோரியம்.

நாளை அது தமிழ்நாடு முழுக்க ஒலிக்குமே? யார் யாருக்கெல்லாம் ஜுரம் வருமோ!

3 Comments
 1. tamilan says

  Coward, will he talk like this while JJ or MK is alive?

  Thoo

 2. Mohammed Ismail says

  இணையதளங்களில் பாக்ஸ் ஆபீஸ் ரிபோர்ட்னு அபத்தமா ஒரு பொய்யை சொக்கிபீடியா சிபிடாட்காம் சினிமா வெபசைட்னு ஆளாளுக்கு ஒரு பொய்யை 5 ரூபாய் வெப்சைட் ஆரம்பிச்சு அடிச்சுவிடுறாங்க முதலில் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்னா குத்துமதிப்பா ரூம்ல உட்கார்ந்துகொண்டு தயாரிப்பாளரையும் அடிவருடிகளையும் கேட்டும் நடிகரின் ரசிகர்களின் எண்ணிக்கையை பார்த்தும் பல நேரங்களில் பணம்வாங்கிகொண்டு சாதகமாக எழுதுவதுனு போய்ட்டு இருக்கு பாக்ஸ் ஆபீஸ் பேசுறவங்களுக்கு சில கேள்விகள் முதலில் தமிழகம் முழுவதும் சரியாக தியேட்டர் எண்ணிக்கையும் உலக அளவில் தியேட்ட்டர் எண்ணிக்கையும் தெரியுமா? 900 தியேட்டரில் ரிலீசான லிங்கா படம் சரியில்லை படம் ப்ளாப்னு சொன்னா அது ஏன் 4 வாரங்கள் 584 தியேட்டர்களில் ஓடுகின்றது ஆனால் மற்ற முன்ணனி பெரிய ஹீரோக்கள் தற்போதுதான் 600 தியேட்டர தொட்டிருகாங்க அவங்க படம் 4 வது வாரம் 100 தியேட்டரில்கூட ஓடுவதில்லை ஆனால் லிங்கா ப்ளாப் மெர்சல் சூப்பர்ஹிட்னு கதையை கட்டி அது 259கோடி வசூல்னு வெப்சைட்ல போடுவாங்க விவேகம் 150கோடினு போடுவாங்க‌ அத ரசிகர் என்கிற போர்வையில் ஐடி டீம் ஷேரா செஞ்சு அவங்க முன்னணி ஹீரோன்னு மாலைமலர்ல விளம்பரம் கொடுப்பாங்க மற்ற பத்திரிக்கையில் செய்திவரும் அவங்க ரசிகர்கூட்டம் அதிகரித்துகொண்டே செல்லும் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்டுக்கொண்டு முடங்கிகிடப்பாங்க 984 தியேட்டரில் ரிலீசாகி 4 வாரங்கள் 584 தியேட்டர்ல ஓடி 7 வாரம் 91 தியேட்ட்ர்ல ஓடின படம் ப்ளாப் அது 150கோடியாம் ஆனா 600 தியேட்டர்ல ரிலீசாகி படம் நல்லா இருந்தால்கூட 4 வதுவாரம் 50 முதல் 100 வரையும் 7 வதுவாரத்தை 10 தியேட்டர்கூட தாண்டாத அஜித்,விஜய் படமும் 400 தியேட்டருக்குமேல் ரிலீசே ஆகாத கமல் ஹாசன் 3 வதுவாரமே 25 தியேட்டர்ல ஓடாத நடிகர் ஆனா வசூல் மட்டும் விஜய்,அஜித்,கமல் எல்லாம் 100 குரோர்கிளப் ஹீரோனு பேசுறீங்க நான் வெளிப்படையா சவால் விடுக்கின்றேன் தமிழ் திரை உலகிற்க்கு ரஜினியோட ப்ளாப் படத்தையும் மற்ற நடிகர்களின் மாபெரும் வெற்றிப்படத்தையும் ஒப்பிட விவாதிக்க என்னுடன் தயாரா? உண்மை இதுவரை 100 கோடி வசூலை தாண்டிய ஹீரோ ரஜினி மட்டும்தான் என்பது 100%உண்மை

 3. John Rufus says

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தின் இரண்டாவது லுக் வெளியானது. திடீரென்று வெளியானாலும், சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி விட்டது. பின்னணியில் காலை சூரியன் உதிக்கும் காட்சியில், மொட்டை மாடியில் உக்கார்ந்து இருப்பது போல் தெரிகிறது. இரு கோபுரங்களும் பின்னால் இருப்பது மதுரையை நினைவு படுத்துகிறது. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில், அவருக்கே உரிய ஸ்டைலில் இடது , வலது கைகளை வெவ்வேறு விதமாக வைத்திருக்கிறார். இதுவரையிலும் இல்லாத மீசையுடன், 80 களின் தோற்றத்தில் மிளிர்கிறார். பின்னால் தெரியும் சூரியனை அவரது தோள், கழுத்துப் பகுதி மறைத்து இருப்பதுவும், சூரியன் உயரத்திற்கு மேலே அவருடைய தலை, முகம் தெரிவது போலவும் இந்தப் படம் இருக்கிறது. அரசியல் ரீதியாக ரஜினிகாந்துக்கு திமுக மட்டுமே சவாலாக கருதப்படுகிறது. திமுகவின் சின்னமான உதயசூரியனை மறைத்துக் கொண்டு, அதற்கும் உயரமான இடத்தில் இருப்பது போல் இந்தப் படம் இருப்பதால், சூரியனை வென்ற ரஜினிகாந்த் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சன் குழுமத்தின் படத்திலேயே சன் – ஐ மறைத்துக் கொண்டு முன்னால் ரஜினிகாந்த் இருப்பது போல் படம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!. அரசியலில் இறங்கி இருக்கும் ரஜினிகாந்துக்கு இது ஒரு சிம்பாலிக்காகவும் அமைந்து விட்டதை மறுக்க முடியாது.

Leave A Reply

Your email address will not be published.