சர்கார் 2 ந் தேதியே ரிலீசா? பரபரப்பு செய்திக்கு முடிவு!

2

கடந்த 24 மணி நேரத்திற்கு முன்பு வரைக்கும், வானிலை சும்மாயிருந்தாலும், வாய் காதெல்லாம் புண்ணாகிற அளவுக்கு இடி சப்தம்! ஏன்? சர்கார் படம் முன்னாடியே ரிலீஸ் ஆகுதாம்ல? என்று ரசிகர்கள் திண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் சொன்ன தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு என்றால் எப்படியிருக்கும்? கொண்டாட்டமும், திண்டாட்டமும் ஒன்றாக கலந்தடிக்க, லப் டப் எகிறிக் கிடந்தார்கள் விஜய் ரசிகர்கள். மிஸ்டர் ஃபாதர் பிள்ளை என்பவரின் ட்விட்தான் இத்தனைக்கும் காரணம்.

‘அவரு சொன்னா கரெக்டாதான் இருக்கும்ப்பா’ என்று நம்பியதன் கோளாறு அது. நிஜத்தில் விசாரித்தால், திட்டமிட்ட தேதியில்தான் படம் வருகிறது. முன் கூட்டியே வருவதற்கான முயற்சிகள் இல்லை என்றார்கள். ஏனிப்படி ஒரு செய்தி நடமாடியது? சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் அல்லவா? அவர் தரப்பு சாட்சியங்கள் படு ஸ்டிராங்காக இருக்கிறது. தேவைப்பட்டால் நானே சாட்சிக் கூட்டில் ஏறி சாட்சி சொல்லவும் தயார் என்று கூறிவிட்டார் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ். ஒருவேளை வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், அது படத்தின் ரிலீசை பாதித்தவிடக் கூடாதில்லையா? அதை நினைத்துதான் இப்படியொரு பதிவு போடப்பட்டிருக்கலாம்.

ஆனால் நிஜக்கதையே வேறு? சன் பிக்சர்ஸ் நிர்வாகம், தமிழகத்தின் படு பயங்கரமான சினிமா புள்ளிகள் சிலரின் பெயரை சொல்லி அவர்களுக்கு சர்கார் படத்தின் விநியோக உரிமை போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது. அதையடுத்து இந்த பிரமுகர்கள் ஒதுக்கப்பட்டும் விட்டார்கள். தமிழக தியேட்டர் வட்டாரத்தில் செல்வாக்காக இருக்கும் இவர்கள், சர்காருக்கு எதிராக விஜய் ஆன்ட்டனியில் திமிரு புடிச்சவன் படத்தை கொம்பு சீவி இறக்கப் போகிறார்கள். ஒருவேளை 2 ந் தேதி படத்தை வெளியிட்டால், இதுதான் சாக்கு என்று 6 ந் தேதி சர்காரை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டு எல்லா தியேட்டர்களிலும் திமிரு புடிச்சவன் படத்தை இறக்கிவிட்டால்? அதுதான் சன் பிக்சர்சின் யோசனையாக இருக்கிறதாம்.

அவ்வளவு பெரிய நிறுவனம் இவர்களுக்கு அஞ்சுமா? வேறு வழியில்லை. அஞ்சிதான் ஆகவேண்டும். தியேட்டர் ஏரியாவை பொருத்தவரை இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருக்கிறதாம். அப்படியிருக்க சன் நிறுவனத்தின் எச்சரிக்கை உணர்வு சரியானதுதான் என்கிறார்கள் இங்கே!

கன்சியூமருக்கு அஞ்சிய காலம் போய், புரோக்கர்களுக்கு அஞ்சுகிற காலமா இருக்கே? முதல்ல இதை தடுத்துட்டு முதலமைச்சர் ஆகுங்கப்பு!

2 Comments
  1. Rajesh says

    சாக்கடை சர்க்கார் திருட்டுக்கதை படம் 100 சதவிகிதம் வராது. அப்படியே வந்தாலும் ஒரு நாள் கூட திரையரங்கில் ஓடாது.
    தமிழ்நாட்டின் துரோகிகளுக்கு என்றும் இடம் கிடையாது.

  2. ஜேம்ஸ் வசந்தன் says

    திருட்டுக்கதை சர்க்கார் படம் படுதோல்வி படமாகத்தான் அமையும். இனியும் அப்பாவி ரசிகர்கள் விஜயிடம் ஏமாறத்தயாராக இல்லை. விஜய் எதையுமே சுயமாக சிந்தித்தது கிடையாது. எல்லாமே அடுத்தவனை பார்த்து காப்பி அடித்தது தான். அவனது போலி முகத்திரையை அவனது ரசிகர்களே கிழிக்க துவங்கி விட்டனர். அவன் சினிமா மார்க்கெட் இத்தோடு காலி. இனி அவனுக்கு சங்கு தான்.

Leave A Reply

Your email address will not be published.