அரசியலுக்கு வரும் ரஜினி கமல்! சத்யராஜ் செம நக்கல்!

அமைதிப்படை மாதிரியான அதிரடி அரசியல் படங்களில் நடித்தவர்தான் சத்யராஜ். அவருக்கே சில ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி ஐயே என்று இருக்கிறது போலும். சிபிராஜ் நடிக்கும் சத்யா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இப்படத்தின் முதலீட்டாளர் (வார்த்தை உபயம் சத்யராஜேதான்) என்ற முறையில் இவரும் கலந்து கொண்டார்.

ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், படத்தின் இசையமைப்பாளர் சைமன் கே கிங் ஆகியோர் பேசி முடித்ததும் மைக்கை தொட்டார் சத்யராஜ். ‘இங்கு சிபிராஜ் நல்லா பேசினார். ஆர்.கே.நகர்ல போய் பேசுற அளவுக்கு கூட அவருக்கு திறமை வந்திருச்சோன்னு நினைச்சேன். ஆனால் அரசியல் ஆசையெல்லாம் இப்ப வேணாம். அதுக்கெல்லாம் வயசாகியிருக்கணும்…’ என்று கூறிவிட்டு உதட்டை கடித்துக் கொண்டவர், ‘நான் வேற… என்னென்னவோ பேசிகிட்டு’ என்றார் புன்னகை வழிய. அவர் ரஜினியையும் கமலையும்தான் கிண்டல் செய்கிறார் என்பதை புரிந்து கொண்டு சிரித்தது கூட்டம். சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றபின் ஒரே போக்கிடம் அரசியல்தான் என்பதை போல சத்யராஜ் பேசியது நகைச்சுவை என்றாலும் நிஜமும் அதுதானே?

தெலுங்கில் வெளிவந்து ஹிட்டடித்த ஷனம் படத்தைதான் சத்யா என்ற தலைப்பில் ரீமேக் செய்திருக்கிறார்கள். படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்குவதற்கு முன் பாகுபலி படப்பிடிப்பில் இருந்தாராம் சத்யராஜ். படத்தின் ஹீரோ பிரபாஸ்சிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க, அவர்தான் ஷனம் படத்தை நம்பி வாங்குங்க என்றாராம் சத்யராஜிடம்.

விஜய் ஆன்டனியின் சிபாரிசின் பேரில் சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை இயக்க வைத்திருக்கிறார் சிபிராஜ்.

இவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன். பேசும்போது, மிகவும் ஒழுக்கமான நேர்மையான சத்யா படத்தின் டீமுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி என்றார். இந்த வார்த்தைகளில் அடங்கிய பாராட்டுகள் ஓகே. ஒழுக்கமான நேர்மையான என்று சொன்னீங்களே… அப்படின்னா நீங்க நடிச்ச முந்தைய படங்கள்ல?

டவுட்டை கிளம்பிட்டீங்களே தாயீ?

1 Comment
  1. Ravi says

    இதோ வந்து விட்டது டிசம்பர் 12. நமக்கு முன்னால் தயாராகி விடுவார்கள் வயித்தெரிச்சல் பேர்வழிகள் பிறந்த நாள் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் டிவி சேனல்களை தங்கள் பதிவுகளில் வறுத்தெடுப்பார்கள். தலைவர் பிரமாண்ட பிறந்தநாளை பார்த்து வருத்தப் படும் வக்கிரம் பிடித்தவர்கள்.

    திடீரென்று பத்தாயிரம் கோடியுடன் தலைவர் படத்தை போட்டு, ரஜினி சொத்து மதிப்பு என்று கிளப்பிவிடுவார்கள். பால் அபிஷேகம் போட்டோவைப் போட்டு ’இன்னும் இவனுங்க திருந்தல’ என்ற பதிவுகளை, சொந்தமா நாலு காசு சம்பாதிக்கத் தெரியாதவர்கள் போடுவார்கள்.

    மானத் தமிழன் கொண்டாட மாட்டான் என தமிழ்த் தேசியம்ன்னு தாயா புள்ளையா பழகிக்கொண்டு இருக்கும் மக்களை பிரிக்கிற கூட்டத்திலிருந்து ஒரு குரல் வரும்.

    புயல் வெள்ளத்திற்கு என்ன செய்தார்ன்னு, என்னமோ இவங்க மட்டும் தான் சமூக சேவையை குத்தகைக்கு எடுத்துக்கிட்ட மாதிரி சிலர் கிளம்புவார்கள்

    ஏதாவது ஒரு ஹீரோயின் போட்டோவை தலைவர் படத்தோடு போட்டுட்டு இவருக்கு இவர் ஜோடியா? ஒரு அரைவேக்காட்டுப் பையன் பதிவு போடுவான்.

    நான் தலைவர் ரசிகன் அப்படினு அவசர அவசரமா வாடஸ் ஆப்பில் பேசி அவதூறுகளை பரப்பி விடுவான். ஆனா அவன் பிறப்பே ஒரு இழுக்குன்னு நாம சொல்ல வேண்டியது இல்லை.

    மோடி வாழ்த்தைக்கூட இந்த முறை பயங்கரமா முடிச்சு போடுவானுங்க. காவி ன்னு சாயம் பூசப்பார்ப்பாங்க. என்னமோ மோடி இந்த வருஷம் தான் புதுசா வாழ்த்து சொல்ற மாதிரி பேசுவாங்க.

    எங்கே ஒரு கோடி எனக் கேட்பான் ஒரு ஓட்டைவாயன். 2.0 வை புறக்கணிப்போம் ன்னு புறமுதுகு காட்டி ஓடும் கூட்டம் ஒரு பதிவு போடும்.

    ஹா ஹா.. எத்தனை வயித்தெரிச்சல்கள். இவர்கள் சார்ந்த கட்சி சங்கம் இயக்கம், தலைமையின் கையாலாகதத் தனத்தின் வெளிப்பாடுதான் இந்த அறை கூவல்கள் எல்லாம். தன் தலைவனுக்கு இது மாதிரி பெயரும் புகழும் இல்லையே என்ற பொறாமையின் உச்சம் தான் இந்த மாதிரி பதிவுகள். கோடிக்கணக்கில் இவருக்கு மட்டும் கூட்டம் எப்படி, இதை எப்படி உடைத்தெரியலாம் என்ற உள்குத்தின் வெளிப்பாடுதான் இது மாதிரி வேலைகள்.

    ரஜினி நல்லவர், ரஜினி ரசிகர்களும் நல்லவர்கள் என்று நாடும், நாட்டு மக்களும் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். செய்யாமல் செய்தி ஆக்குவதைவிட, செய்து விட்டு அதைச் செய்தி ஆக்காமல் இருப்பவர் தான் உத்தமர் ரஜினிகாந்த்.

    மகிழ்ச்சி… அட்வான்ஸ் ஹேப்பி பர்த் டே தலைவா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கருப்புத் தல! கண்ணெதிரே மாற்றம்! என்னய்யா நடக்குது?

‘நான் இப்படிதான். முடிஞ்சா ரசி. இல்லேன்னா நடையை கட்டு’ என்கிற கொள்கை கோட்பாட்டுக்கெல்லாம் கும்பிடு போட்டுவிட்டார் அஜீத். நாலாபுறத்திலிருந்தும் கேட்ட நஷ்டக் குரல்தான் காரணம். இனிமேலும் தன்...

Close