நடுங்க வைத்த பலூன் அஞ்சலி! இது வேற லெவல்!

0

தமிழ் பேசுகிற நாயகிதான் வேண்டும் என்று ஒவ்வொரு இயக்குனரும் உறுதியாக இருந்திருந்தால், ஐஸ்வர்யாராய் சென்னை ஏர்போர்ட்டை பார்த்திருக்க மாட்டார். ‘யாதும் நடிகை, யாவரும் ஜாலிர்’ என்கிற கொள்கைக்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் நம்ம ஊர் இயக்குனர்கள்தான். இல்லையென்றால் அண்ணன் சீமான், தன் படத்தில் சிங்கள நடிகை பூஜாவை நடிக்க வைத்திருப்பாரா?

ஆனால் பலூன் பட இயக்குனர் சினிஷின் கொள்கை பற்றுக்கு ஒரு கும்பிடு போட்டுவிடுவதுதான் சரி. ஏனென்றால் இந்தப்படத்தில் நடிக்கும் அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கூறிவிட்டாராம். இதையடுத்துதான் அஞ்சலியும், ஜனனி அய்யரும் ஹீரோயின் ஆகியிருக்கிறார்கள் பலூன் படத்தில்.

இந்தப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு மஞ்சள் நிற அழகை, கருப்பு நிற கவுனில் திணித்துக் கொண்டு வந்திருந்தார் அஞ்சலி. ஏரியாவே ஜில்லாகி விட்டது. படக்குழுவினர் மட்டுமல்ல… பலரும் அவரையே சுற்றி சுற்றி வர, என்னங்க… என்னை அப்படி பார்க்குறீங்க என்று சிலரிடம் வாய் விட்டே கேட்டுவிட்டார் அஞ்சலி. பலரது பெருமூச்சில் பிரசாத் லேப் வெப்பமானது இருக்கட்டும்…

படத்தில் அஞ்சலியின் பர்பாமென்ஸ் அசத்தலோ அசத்தல். ஒரு வலுவான பிளாஷ்பேக்கில் ஜனனி அய்யரும், சைஸ் பண்ணப்பட்ட மீசையுடன் கூடிய ஜெய்யும் காதலித்துக் கொண்டிருந்தார்கள். இது பேய்க்கதை என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை.

படத்தில் பேயை பார்த்து நடுங்குகிறார்களோ இல்லையோ? அஞ்சலியை பார்த்து நடுங்குவது நிச்சயம். இந்த நடுக்கம்… உடம்புக்குள்ள என்னவோ பண்ணுமில்ல… அது! ஆங்… அதேதான்!

Leave A Reply

Your email address will not be published.