கட்சி மாறிய சாந்தனு! இப்போது அவர் அஜீத் பக்கம்!

1

‘சர்கார்’ ரிலீஸ் நேரத்தில் சாந்தனு பட்ட பாடு அவருக்குதான் தெரியும். அப்படத்தின் கதை திருட்டுக்கதை என்று நிரூபிக்க சாந்தனு அப்பா பாக்யராஜ் துடியாய் துடிக்க, இன்னொரு பக்கம் இவரை துடியாய் துடிக்க வைத்தார்கள் விஜய் ரசிகர்கள். இவர்தான் விஜய்யின் தீவிர ரசிகராச்சே, அந்த உரிமையில்தான்.

அசிங்க அசிங்கமாக கழுவி ஊற்றப்பட்டார் சாந்தனு. கண்ணீரும் கம்பலையுமாக இருந்தவருக்கு ஆறுதல் சொல்லக் கூட விஜய் சம்பந்தப்பட்ட யாரும் இல்லை. கட்… ‘விஸ்வாசம்’ ரிலீஸ் நேரத்தில் தன் ஆதங்கத்தை அப்படியே கொட்ட ஆரம்பித்துவிட்டார் சாந்தனு. முழுநேர அஜீத் ரசிகர் போல அவர் விஸ்வாசம் படத்தை பாராட்டியதுதான் விஜய் ரசிகர்களுக்கு செம புகைச்சல்!

இன்னொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்களோ, என்னவோ?

1 Comment
  1. Ganesh says

    Is this a news? velangiruveenga.

Leave A Reply

Your email address will not be published.