குள்ள அப்பு ஃபார்முலாவே இன்னும் வௌங்கல… அதற்குள் விஜய்?

1

தமிழ்சினிமாவில் தனக்குத் தானே பரீட்சை வைத்துக் கொண்டு பாசா? பெயிலா? கணக்கு பார்ப்பதில் கமலுக்கு நிகர் அவரே! பெரும்பாலும் ஏண்டா எழுதி தொலையுறாரு? என்கிற அளவுக்கு இம்சையை தரும் அவர், சில நேரங்களில் மொத்த மாநிலமும் உச்சி முகர்ந்து பாராட்டுகிற மாதிரி எதையாவது செய்துவிடுவார். அப்படியொரு அதிசயம்தான் அவர் நடித்த குள்ள அப்பு பாத்திரம். அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குள்ள அப்புவை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன? இன்று வரை அப்படியொரு கேரக்டரை அவர் எப்படி தத்ரூபமாக தந்தார் என்பதுதான் சினிமா ரசிகர்களின் வியப்பு.

காலை மடக்கிக் கொண்டு நடித்தார் என்று சிலரும், கீழே பள்ளம் பறிச்சு நின்று நடித்தார் என்று சிலரும், கிராபிக்ஸ்டா என்று சிலரும் இன்றளவும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை கமலிடம் இது குறித்து கேட்டபோது அந்த ரகசியம் எனக்குள்ளேயே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். இது கமலின் சாதனை.

ஆனால் விஜய் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கிறவரில்லை. அப்படியாப்பட்ட அவரே புலி படத்தில் குள்ள அப்புவாக நடித்திருக்கிறாராம். நமது இணையதளத்தில் முன்பே எழுதப்பட்ட தகவல்தான் இது என்றாலும், இதை புலி டீமே தற்போது உறுதி படுத்தியிருக்கிறது. எப்படி?

சமீபத்தில் வெளியான ‘புலி’ பட பாடல்களில் ஒன்றில் ‘ஜிங்கிலியா.. ஜிங்கிலியா சித்திரகுள்ளன் கலக்குறானே.. ‘ என்று ஒரு பாடலின் பல்லவி தொடங்குகிறது. ‘சித்திரக்குள்ளி சிலுக்குறாளே.. ’ என்று ஹீரோ, ஹீரோயினைப் பார்த்து பாடுவதுபோலவும் வருகிறது.

இப்ப சொல்லுங்க? விஜய் குள்ளமாக நடிக்கிறார்தானே?

1 Comment
  1. Ravi says

    Your writing is not in correct form. Improve your writing style..

Leave A Reply

Your email address will not be published.