27 பேருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ்! விஷாலின் அதிரடியால் தத்தளிக்குமா சங்கம்?

0

அண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு வரலாறு காணாதது. கூட்டம் துவங்கிய அரை மணி நேரத்திலேயே ஜனகனமனகண பாடி நிகழ்ச்சியை முடித்துவிட்டார் விஷால். கூட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த எதிரணியினர் கூச்சலும் குழப்பமும் விளைவிக்க, இனிமேலும் முடியாது என்பதால்தான் அப்படியொரு முடிவெடுத்தார் விஷால்.

இதில் பேரதிர்ச்சிக்கு ஆளாகியவர்கள் அந்த கூட்டத்தை நடத்த விடாமல் கூச்சலிட்டவர்கள் மட்டுமல்ல… பொதுக்குழுவை மேற்பார்வையிட வந்த நீதியரசரும்தானாம். இப்படியொரு திருப்பம் அவருக்கு சொல்லாமலே நடந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில்தான், இந்த பிரச்சனையை இதோடு விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் விஷால். அங்கு கூச்சலிட்ட சுமார் 27 தயாரிப்பாளர்களுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் போயிருக்கிறது. உங்களை ஏன் சங்கத்திலிருந்து நீக்கக் கூடாது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளதாம் அதில்.

ஆனால் அதற்கு சற்றும் குறையாத வகையில் எதிர் சீற்றம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் இந்தப்பக்கம். விஷாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் திட்டத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பம் ஆகியிருக்கிறதாம்.

ஆக மொத்தம் யார் பொறுப்புக்கு வந்தாலும், அப்பாவி தயாரிப்பாளர்கள் தலையில் தேங்காப்பூ டவல்தான்!

Leave A Reply

Your email address will not be published.