ரஜினி எனக்குதான்! சிம்பு தனுஷ் போட்டி!

0

‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தோடு சூப்பர் ஸ்டார் ரஜினியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சிம்பு, போகிற போக்கில் வாரிசு நாற்காலிக்கும் சேர்த்து குறி வைத்ததை அவரே மறந்தாலும் மிச்ச மீதி கதைகளை சொல்லிக் கொண்டிருக்கும் யூ ட்யூபும், அதன் வாடிக்கையாளர்களும் மறப்பதற்கில்லை. எல்லா தகுதியும் இருந்தும், பொல்லாத கொடுங்குணத்தால் வாய்ப்பை தவற விட்ட சிம்புவுக்கு, காலம் தந்த புத்திமதி கொஞ்ச நஞ்சமல்ல.

ஆனால் நடுவில் நுழைந்து, நிஜ வாரிசாக மாறிவிட்ட தனுஷ் இன்று இருக்கிற இடத்தை தக்க வைத்துக் கொண்டதுடன், நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று பறந்து கொண்டேயிருக்கிறார். ஒரு புன் முறுவலோடு அதை ரசித்துக் கொண்டேயிருக்கிறார் ரஜினியும். (நடிப்பு, புகழ், பொருள், பெருமை, இந்த விஷயத்திற்காகதான் அந்த புன்சிரிப்பு. மற்றதற்கல்ல!)

விரைவில் ரஜினியே கால்ஷீட் கொடுக்க, கபாலி பார்ட் 2 வேலைகளை ஆரம்பித்துவிட்டார் தனுஷ். ஆனால் சிம்புவுக்கு இப்போதுதான் ரஜினியின் அருமை புரிந்ததோ என்னவோ? அவரைப்போலவே கெட்டப் போட்டு, அவரை போலவே ஸ்டைல் காட்டுகிறார் அன்பானவன், அசரவாதவன், அடங்காதவன் படத்திற்காக! படையப்பாவில் வரும் அந்த வயசான கெட்டப்பில் வருகிறார் அவர். இந்த புகைப்படத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்து சந்தோஷப்பட்டிருக்கும் சிம்பு, அப்படியொரு கேரக்டரில் ஏன் நடிக்க வேண்டும்? ஏன் அதை ட்விட்டரில் பகிர வேண்டும்?

ரஜினி பேமிலியில் நிலவும் புகைச்சல் நேரத்தில் சிம்பு செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும், சிம்பு தனுஷ் போட்டி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? அட… இந்தக் கேள்வியை நாங்க கேட்கலைங்க! ரசிகருங்க கேட்கிறாங்க!

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.