கண்டுகொள்ளாத அனிருத்! கை கொடுத்த சிம்பு! சந்தோஷத்தில் சந்தானம்!
சந்தானத்தின் பரமபத மேப், சத்தியமாக நம்ம சிம்புதான்! விஜய் தொலைக்காட்சியில் வெறும் காமெடி தொகுப்பாளாராக இருந்தவரை சினிமாவுக்கு கொண்டு வந்தவரே சிம்புதான். அந்த நம்பிக்கையை சிம்பு விஷயத்தில் காப்பாற்றி வருகிறார் சந்தானம். கால்ஷீட் தேதிகளால் கசக்கப்பட்ட காலங்களில் கூட, சிம்பு அழைக்கிறார் என்றால் பிற படங்களை போட்டது போட்டபடி போட்டு விட்டு ஓடி வருகிற அளவுக்கு அவரை உயரத்தில் வைத்துப் போற்றி வருகிறார் சந்தானம். இந்த குரு தட்சணைக்கு சிம்பு கொடுக்கப் போகும் இன்னொரு சிறப்புதான் இங்கே நாம் சொல்லவிருக்கும் விஷயம்.
கடந்த சில மாதங்களாகவே அனிருத்தை விரட்டி வருகிறார் சந்தானம். தனது படம் ஒன்றுக்கு இசைமைக்கக் கேட்டு தொடர் தொல்லை கொடுத்து வரும் இவரை, அவர் கண்டு கொள்ளவே இல்லை. காரணம்? சிவகார்த்திகேயனுக்கும் அனிருத்துக்குமான பந்தம் அப்படி. இவரும் அவரும் எதிரி. இவர் படத்திற்கு இசையமைத்தால், அவர் கோபித்துக் கொள்வார் என்பதாலேயே சந்தானத்தை சட்டை செய்யாமலிருந்தார் அனிருத்.
இவற்றையெல்லாம் கண்டும் காணாமலிருந்த சிம்பு, இனிமேலும் அமைதி காப்பது சரியல்ல என்று நினைத்திருக்கலாம். “நானே உன் படத்துக்கு இசையமைக்கிறேன்யா…” என்று கூறிவிட்டார். மணி பர்சுக்கு ஆசைப்பட்ட சந்தானத்திற்கு ஏடிஎம் மிஷினே கிடைச்சா எப்படியிருக்கும்? விரைவில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்தின் அறிவிப்பில் ‘சிம்புவின் இசையில்…’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தால் அது சிம்புவின் பெருந்தன்மையே அன்றி வேறில்லை பராபரமே!
அப்போ ரிலீஸ் ஆனா மாதிரித்தான்..
சிம்பு என்ன ஏ.ஆர். ரஹ்மானா? அவர் கை கொடுத்தார்னு சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்! பாடகர்கள் யாரும் இசையமைப்பாளர்களா ஜெயிச்சதே இல்லை. தான் ட்ரையல் பாக்குறதுக்கு சந்தானத்தை use பண்ணிக்கிறார் சிம்பு! என்னமோ சிம்ப இசையமைச்சு குடுக்கணும்னு பலபேர் க்யூவில நின்ன மாதிரியும், அவங்களை எல்லாம் விட்டுட்டு அவர் இவர் படத்துக்கு ஒத்துக்கிட்ட மாதிரியும் நியூஸ் போடுறீங்க?