சிம்புவுக்கு முன் ஜாமீன்! அடுத்தது என்னவாம்?

0

சிம்பு காத்திருந்த அந்த நல்ல செய்தி இன்று வந்துவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது. ஆனால் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன்தான் அது. “வருகிற 11 ந் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் முன் நேரில் ஆஜராக வேண்டும். போலீசார் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்க வேண்டும்” என்றெல்லாம் கூறியிருக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.

இப்படியொரு முன் ஜாமீன் கிடைக்கும் என்பதற்காகதான் சிம்பு காத்திருந்ததாக கூறப்படுகிறது. தொலைக்காட்சிக்கு நேரில் வர முடியாமல் தொலை பேசி மூலம் பேசிவந்த சிம்பு, இனி நேரில் தோன்றி பேசினாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் அவரது தரப்பில். இது ஒருபுறமிருக்க, நான் தேவைப்பட்டால் பிரஸ்சை மீட் பண்ணிக் கூட பேசுறேன் என்று கூறியிருக்கிறாராம் அவர்.

இது ரொம்ப எமோஷனலான நேரம். எல்லாம் கூடி வர்ற நேரத்தில் மீண்டும் எதையாவது பேசி பிரச்சனையை கூட்ட வேண்டாம் என்று நினைத்த சிம்பு நலன் விரும்பிகள், எல்லாம் முடியட்டும். அப்புறம் பேசிக்கலாம் என்கிறார்களாம். இதற்கிடையில் போலீஸ் முன் ஆஜாராகி விளக்கம் அளிக்க மேலும் 15 நாள் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறது அனிருத் தரப்பு.

தேர்தல் கூட்டணி செய்திகள் ஓங்க ஓங்கதான் சிம்பு அனிருத் மீதான செய்தியின் கனம் குறையும் போலிருக்கிறது. அதுவரைக்கும் இருவரும் கூட்டுப்புழு கோபப்பட்ட கதையாக உள்ளேயே இருந்து குமுற வேண்டியதுதான்!

Leave A Reply

Your email address will not be published.