சித்தராமய்யாவை சந்திக்க சிம்பு புதிய திட்டம்!

விரைவில் காவேரி ‘கீழாண்மை ’ வாரியம்?

0

கடந்த சில தினங்களுக்கு முன் சிம்பு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது எல்லார் முகத்திலும் இருந்த ஏர் கூலர் அவுட்! சிம்புவை இடைமறித்தவர்கள், ஏன்ங்க நாம போய் அவிங்ககிட்ட கெஞ்சணும்? காவேரி நம் உரிமை என்றெல்லாம் ஆத்திரப்பட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் சிம்புவின் அன்றைய பேச்சுதான்.

கர்நாடகாவில் இருப்பவர்களும் என் தாய், சகோதரிகள்தான். அவங்ககிட்ட நான் கேட்கிறேன். நீங்க பயன்படுத்தியது போக மிச்ச தண்ணீரை எங்களுக்கு கொடுங்க. அதுக்கு அடையாளமா 11 ந் தேதி ஈவினிங் அங்கிருக்கிற தமிழர்களில் யாருக்காவது ஒரு கிளாஸ் வாட்டர் கொடுங்க. உங்களுக்கு காவேரி தண்ணீரை எங்களுக்கு கொடுககிற மனசிருக்குன்னு நாங்க புரிச்சுக்குறோம் என்றார்.

அன்று நக்கலாக தெரிந்த அந்த விஷயம், இன்று ஏராளமான ஆச்சர்யத்தை தந்திருக்கிறது. சிம்புவின் சொல்லுக்கு கர்நாடகாவில் ஏகப்பட்ட மரியாதை. ஏராளமான கன்னடர்கள் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பேருந்தில் ஏறி, அதில் பயணம் செய்த தமிழர்களுக்கு வாட்டர் பாட்டில் வழங்கினார்கள். பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என பலரும் தத்தமது பங்குக்கு தண்ணீர் வழங்கி, வீ வாண்ட் ஹியூமானிட்டி என்றெல்லாம் பேச… ஆனந்த கண்ணீரால் நனைந்தார் சிம்பு.

இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறாராம். ‘தமிழக முதல்வர் கேட்டே அதற்கு பதிலளிக்காமல் இழுத்தடிக்கும் சித்துவேலை ராமய்யா, சிம்புவிற்கா அனுமதி கொடுப்பார்?’ என்று வழக்கம் போல நாம் நக்கலடிப்போம்.

ஆனால் சிம்பு, சந்தித்தே விடுவார் போலிருக்கிறது.

அப்படி சிம்பு குறுக்கு வழியில் சாதித்துவிட்டால், அதற்கு ‘காவேரி கீழாண்மை வாரியம்’ என்று பெயர் வைத்தாவது, தாகம் தணித்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது மக்களே!

Leave A Reply

Your email address will not be published.