ஊருக்கெல்லாம் வேற சம்பளம்! இவருக்கு மட்டும் தனி சம்பளம்!

சிம்புவின் அப்பாவி சலுகை!

0

சந்திக்க வேண்டிய இடத்தில் சந்தித்து சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால், சிந்திக்க வேண்டிய விதத்தில் சிந்திச்சு சம்பளத்தை குறைப்பார் போலிருக்கிறது சிம்பு. மொத்தம் எத்தனை பல்ப் உடைந்தது என்கிற கணக்கெல்லாம் சிம்பு பார்க்க மாட்டார். பார்த்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளிவருவதற்கு முன், ‘என் சம்பளம் இனிமே 15 கோடி’ என்று கூறி, இன்டஸ்ட்ரியின் மண்டையில் பொத்தல் போட்டார். அலறிய இன்டஸ்ட்ரி தன் விலாசக் குறிப்பிலிருந்து சிம்புவின் வீட்டையே பிளாக் பண்ணுகிற அளவுக்குப் போனது.

‘உங்க படம் எதுவும் ஒடலங்க’ என்று அருகில் சென்று சொல்கிற அளவுக்கு ஆளே இல்லை என்கிற நிலையில், லண்டனுக்கே போய் சிம்புவுக்கு சீதோஷ்ண நிலையை உணர வைத்தாராம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அதுமட்டுமா? சிம்பு சாதாரணமாக வாங்குகிற எட்டு கோடி சம்பளத்தை இன்னும் குறைத்து ஆறு கோடிக்கு அவரை சம்மதிக்க வைத்தாராம்.

“எனக்கு தெரியாம தம்பி ஒத்துக்குட்டாப்ல…” என்று வீடு குறுக்கே நின்றால், சமாளிக்கிற சக்தி ஞானவேல்ராஜாவுக்கு இருக்கிறதா, இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். சிம்பு நடிக்கப் போகிற இந்தப்படத்தில் அவருக்கு அன்டர்கிரவுன்ட் தாதா கேரக்டர். இவருக்கு எதிராக நடிக்கப் போகும் கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கவிருக்கிறார்.

கன்னடத்தில் பல வருஷங்களுக்கு முன் வெளியான முப்தி என்ற படத்தின் ரீமேக்தானாம் இது.

ரிலீஸ் நேரத்தில் சிம்பு எந்த கருத்தும் சொல்லாமலிருந்தால் படம் தப்பிக்கும். பார்த்துக்கோங்க பங்காளி!

Leave A Reply

Your email address will not be published.