டெல்லிக்கு எதிர்ப்பு! மதுரைக்கு ஆதரவு! சிம்புவின் திடீர் அரசியல்!

0

நடிகைகள் என்றால் பிராணிகளுக்கு ஆதரவாகவும், நடிகர்கள் என்றால், பிராணிகளை பிரியாணியாக்கி ஃபுல் மீல்ஸ் அடிப்பவர்களாகவும் சித்தரித்து வருகிறது ஊர். அதற்கேற்றார் போல, த்ரிஷா, நிகிதா படேல், வித்யாபாலன் என்று ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகைகள் மதுரை பக்கத்து ஆசாமிகளிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். எப்பவும் நடிகைகள் பக்கமே நின்று வழியும் ஆர்யா, இதை நிரூபிப்பது போல, “ஜல்லிக்கட்டா? அப்படின்னா?” என்று ட்விட்டரில் நக்கல் அடிக்க, அவரை நையப் புடைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்.

இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் சிம்பு. நாங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுதான். ஆனால் கோர்ட்ல இருக்கே விஷயம்? என்று கழண்டு கொள்கிற மத்திய அரசு, இந்த விஷயத்தில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக புகார் கூறுகிறார்கள் மதுரை மக்கள்.

இந்த நிலையில்தான் மிக மிக போல்டாக தன் கருத்தை வைத்திருக்கிறார் சிம்பு.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்ச நீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது. நமது கலாச்சாரத்துக்கு எதிராக திணிக்கப்படும் எந்தச் சட்டமும் நமது தேசத்தின் இறையாண்மையை பாதிக்கும் என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். தனி ஒரு எஸ்டிஆராக மட்டுமே இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக, இந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் ஒரு கடைநிலை தூதுவனாகக் கூட என் கருத்தை உரக்கத் தெரிவிக்கிறேன்.

அட சிம்புவை விட்டால், களத்துல இறங்கி காளையை அடக்குவாரு போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.