ரசிகர்களுக்கு சிம்பு தரப்போகும் சஸ்பென்ஸ்!

0

‘ஒருமுறை முத்திரை வாங்கிட்டா என் முத்திரையை என்னாலயே அழிக்க முடியாது’ என்கிற அளவுக்கு ஆபாச வலையில் சிக்கிக் கொண்டுவிட்டார் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் படத்தில் நடிக்கவே அஞ்சுகிற அளவுக்கு ஹீரோயின்களுக்கு அலர்ஜி ஜுஸ் கொடுத்த இவருக்கு, “நான் நல்லவன்… நான் நல்லவன்” என்று சொல்வதே பெரும் வேலையாக இருக்கிறது இப்போது.

அவர் இயக்கி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் துளி கூட ஆபாசமோ, டபுள் மீனிங் டயலாக்கோ இல்லை என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக கூறி வருகிறார் ஆதிக். இதற்கிடையில் ஒரு சிம்புவை ரசித்த அவரது ரசிகர்களுக்கு மூன்று சிம்புவை ஒரே ஸ்கிரீனில் காட்டப் போகிறார் என்கிற தகவல் இனிப்பாகதான் இருக்கும். அந்த இனிப்பின் மீது இன்னும் கொஞ்சம் சர்க்கரையை கொட்டிக் கொள்ளுங்கள் சிம்புவின் அன்பான ரசிகர்களே… வொய்?

இந்தப்படத்தில் மூன்று சிம்புகள் அல்ல. நான்கு சிம்புகள் இருக்கிறார்களாம். நால்வருக்கும் நாலுவித கெட்டப். நாலு வித ஸ்டைல். “ஒரு சிம்புவை பற்றி சொல்லவே வேணாம்னுதான் ஹைட் பண்ணி வச்சுருந்தோம். பட்… படம் இரண்டு பகுதியா வர்றதால அந்த புதிரையும் இப்போ அவுத்துட்டோம்” என்கிறார் ஆதிக்.

இப்படி திடீர் திடீர்னு அவுக்கறதே இவருக்கு வேலையாப் போச்சு!

Leave A Reply

Your email address will not be published.