அதிகாலை ஆறு மணி! அலறவிட்ட சிம்பு!!!!

0

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்கிற பழமொழிக்கு மறுபடியும் பொட்டு வைத்து பூ வைத்தால் சிம்பு செய்தியில் வந்து நிற்கும் போல் தெரிகிறது.

ஆச்சர்யம், ஆனால் உண்மை. கடந்த சில நாட்களுக்கு முன் கோடம்பாக்கத்தின் சில முன்னணி பிரமுகர்களுக்கு போன். காலர் ஐடி யில் சிம்புவின் செல்போன் நம்பர் ஒளிரவும் திக்குமுக்காடிப் போய்விட்டார்கள் இவர்கள். அதிகாலை நேரத்தில் சிம்பு போன் அடிப்பதெல்லாம் நடக்கவே நடக்காத விஷயம். அப்படியிருக்க… அவரது காலர் ஐடியில் இருந்து போன் வந்தால் டவுட் வராதா? வந்தது…

எடுத்துப்பேசினால் எதிர்முனையில் சிம்பு. ‘என்னண்ணே… ஆடிப்போயிட்டீங்களா? ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கேன். என்னவோ, சிம்புவோட கேரியரே முடிஞ்சுருச்சு. இனி அவ்ளோதான்னு சொன்னாங்கள்ல? அப்படி பேசினவங்களுக்கு ஷாக் கொடுத்துகிட்டு இருக்கேன்’ என்றாராம்.

யெஸ்… மணிரத்னம் பட ஷுட்டிங்குக்குதான் இப்படி அதிகாலையில் வந்து அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர். சமீபகாலத்தில் தன்னிடம் வந்து ஒட்டிக் கொண்ட எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டொழித்துக் கொண்டிருக்கிறாராம்.

படி பக்கத்துலேயே இருக்கு. கன்னத்துல போட்டுகிட்டு கட கடன்னு ஏறுங்க சிம்பு!

Leave A Reply

Your email address will not be published.