லண்டன் வாழ் தமிழர்களுக்கு நடிகர் சிம்பு நன்றி! எதுக்காக?

0

ஜல்லிக்கட்டு, காவேரி, ஸ்டெர்லைட், என்று தொடர் முழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவரது திடீர் மாற்றம் சினிமாக்காரர்களை மட்டுமல்ல… பொதுமக்களையும் போட்டு புரட்டி வருகிறது. “இந்த தம்பிய என்னமோன்னு நினைச்சோம்… அட பரவால்லப்பா” என்று வாய் திறந்து விமர்சிக்கும் திருவாளர் தமிழன், “ஆமாம்… இவரு நல்லவரா? கெட்டவரா?” என்கிற டவுட்டை மட்டும் விட்டு ஒழிப்பதாக இல்லை.

இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக தன் கோபக்குரலை எழுப்பி மறுபடியும் ஒரு ‘அட’ போட வைத்திருக்கிறார் சிம்பு. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசியிருக்கும் சிம்பு, அதற்கு கொடுத்த விளக்கம் இருக்கிறதே… சிம்பு(லி) சூப்பர்ப்! “தமிழ்ல பேசுனா, வடக்குல இருந்து உத்தரவு போட்டவங்களுக்கு புரியாது. அதுமட்டுமல்ல, லண்டன்ல இருக்கிற ஸ்டெர்லைட் ஓனருக்கு ‘ஏதோ கத்துறானுங்கப்பா…’ என்பதை தாண்டி, தமிழனின் நிஜ முழக்கம் காதை கிழிக்கணும்ல? அதுக்காகவும்தான்” என்கிறார் தனது இங்கிலீஷ் உரைக்கு!

அதுமட்டுமல்ல. லண்டனில் கூடிய தமிழர்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான துப்பாக்கி சூட்டை கண்டித்து கடும் முழக்கம் எழுப்பினார்கள். அப்படியே அங்கு குடியிருக்கும் ஸ்டெர்லைட் அதிபர் வீட்டு முன்பாகவும் கூடி கோஷம் எழுப்பினார்கள். நம் தமிழ் ரத்தங்களின் இந்த முயற்சியையும் உணர்வையும் மனமார பாராட்டிக் கொண்டிருக்கிறார் சிம்பு.

புல்லா போனாலும் முளைப்போம். கல்லா போனாலும் அடிப்போம்! தமிழன்டா…!

Leave A Reply

Your email address will not be published.