ஓவியா விவகாரம்! சிம்பு எச்சரிக்கை!

0

சிவனேன்னு ஒதுங்கி நிக்குற ஆளை, கடனேன்னு போய் கலவரப்படுத்துற ஆசாமிங்க இனியாவது அடங்குவார்களா? ஏனென்றால் சிம்புவின் கோபம் அப்படி. விஜய் டி.வி யின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் சிம்புவுக்கும் துளி கூட சம்பந்தமில்லை. ஆனால் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதீஷ், பிக் பாஸ் பற்றி சில கருத்துக்களை பதவிடும் போது, அவருடன் சாட்டிங்கில் ஈடுபட்டார் சிம்பு. அப்போது அவர் சொன்ன கருத்துக்களை திரித்து, ‘சிம்பு ஓவியாவை கல்யாணம் பண்ணிக்க விரும்புறாராம்’ என்றொரு தகவல் கோடம்பாக்கத்தில் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டது.

வெகுண்டெழுந்த சிம்பு, ‘போலி அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி என் கருத்தாக பதிவிடும் நபர்களை யாரும் நம்ப வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார். இருந்தாலும் அந்த செய்தி அடங்கியபாடில்லை. மேலும் சில பல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்களுடன் பரப்பினார்கள். இதற்கு மேலும் பொறுமை காத்தால், உச்சி மண்டையில உப்பு வச்சு தேய்ச்சுருவானுங்க என்று நினைத்துவிட்டார் சிம்பு. அதிரடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். என்னவென்று?

“இந்தப் போலி செய்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இறுதியாக எச்சரிக்கை விடுக்கிறேன், மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் நிச்சயம் வேறு வழியில் வேறு விதமான பதிலடி கொடுப்பேன். சாத்தானின் கடவுளைக் கட்டவிழ்த்துவிடாதே”.

இதற்கப்புறமும் வதந்தி பரப்புகிறவர்களுக்கு சிம்புவின் பதிலடி என்னவாக இருக்கப் போகிறதோ? ஒரே அச்சமா இருக்கு!

Leave A Reply

Your email address will not be published.