டைரக்டர் சிவாவுக்கு தொடர் நாமம்! கண்டுகொள்ளாத அஜீத்!

0

அஜீத்தாவது ஆள் ஃபிட்! எக்சர்சைஸ் எனர்ஜி! பல்கேரியா குளிராக இருந்தாலும் சரி… பட்டிப் பார்க்கும் வெயிலாக இருந்தாலும் சரி… எதற்கும் தாங்கும் இரும்பு மனுஷன் அவர். ஆனால் சிவா அப்படியல்ல. உருட்டிவிட்டால் ஒரு தார் சாலையின் குண்டு குழிகளை செப்பனிட்டு விடலாம். அந்தளவுக்கு இருக்கிற அவரும் கூடதான் அந்த பல்கேரியா குளிரில் படபடவென நடுங்கியிருப்பார். அஜீத் குதித்தால் அவரும் அரை கிணறாவது குதித்திருப்பார்.

ஓடியாடி உழைத்த விதத்தில், அஜீத்தின் பாதியாக இருந்த சிவாவுக்கு இந்தப்படத்திற்காக பேசப்பட்ட சம்பளம் முழுசாக வந்து சேர்ந்ததா? இல்லை என்கிறது இன்டஸ்ட்ரி. சுமார் 3 கோடி ரூபாய் சம்பள பாக்கியாம் அவருக்கு. 12 கோடி பேசப்பட்ட சம்பளத்தில், கடைசியாக மிச்சம் வைக்கப்பட்ட சம்பளம் இந்த நிமிஷம் வரை மிச்ச கணக்கிலேயே இருப்பதாகதான் தகவல். இனிமேலும் அது வந்து சேராது என்பதுதான் நிஜம். ஏன்?

அஜீத் பேன்ஸ் அள்ளிக் கொடுக்கும் முதல் மூன்று நாள் கலெக்ஷன் எக்கச்சக்கமாக இருக்கலாம். பேமிலி ஆடியன்ஸ், ரிப்பீட் ஆடியன்ஸ் என்ற கணக்குகளை தொட்டால்தான் ‘விவேகம்’ படத்திற்காக முதலீடு செய்த தொகையையே மீட்டெடுக்க முடியும். இப்போதிருக்கும் கணக்குப்படி, திங்கட் கிழமை வரைக்கும் இந்தப்படம் ஃபுல்லானால் அதிகம் என்கிறார்கள் வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள்.

சிவாவின் சம்பள பாக்கிக்காக அஜீத் ஒரு போதும் குரல் கொடுக்க மாட்டார் என்பது ஏற்கனவே நிரூபணம் ஆன விஷயம். ஏ.எம்.ரத்னம் ‘வேதாளம்’ படத்திற்காக சுமார் 50 லட்ச ரூபாய் சம்பள பாக்கி வைத்துவிட்டாராம். பலமுறை அலைந்து திரிந்த சிவா, கடைசியில் அந்த பணத்தை காந்தி கணக்கில் எழுதினார் என்பது காற்றோடு கலந்த செய்தி. இதை அஜீத்தின் காதுக்கு கொண்டு சென்ற சிவாவுக்கு, “அப்படியா?” என்ற ஒரு அசுவாரஸ்யமான பதில்தான் கிடைத்ததாம் அஜீத்திடமிருந்து.

நிலைமை அப்படியிருக்க… இந்தப்பணத்தை வாங்கிக் கொடுக்கவா போகிறார் அவர்? தயாரிப்பாளரிடமிருந்து 35 சி ப்ளஸ் டாக்ஸ் என்று தன் கணக்கை பிரமாதமாக முடித்துக் கொண்ட அஜீத்திற்கு, சிவாவின் ‘இளைப்பு’ தெரியவா போகிறது?

விஷக்கடியும், கொசுக்கடியும் அவரவருக்கு! அது அஜீத்தாக இருந்தாலென்ன? சிவாவாக இருந்தாலென்ன?

Leave A Reply

Your email address will not be published.