சிவாஜி சென்ட்டிமென்ட்? தெறித்து ஓடிய டாப் ஹீரோஸ்!

1

“நடிகர் சங்க கட்டிடத்தை மீட்பேன் என்று கிளம்பிய விஷால் அண் கோவுக்கு, அந்த சங்க கட்டிடம் உருவாக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவரான சிவாஜியை மதிக்கத் தெரியலேப்பா…” என்ற குரல் காலையிலிருந்தே கேட்க ஆரம்பித்திருக்கிறது. இன்று அவரது நினைவு நாள். இதே நாளில் பூவுலகை விட்டு மறைந்த சிவாஜி, எல்லா வகையிலும் தமிழ்சினிமாவின் ஐகான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஒருபுறம் அவரது புகழ் பாடும் கூட்டம், இன்னொருபுறம் “சிவாஜி என்றால் சில சென்ட்டிமென்ட்டுகள் இருக்கே” என்று அஞ்சி ஓடுவதையும் காது வெறுக்க கேட்க வேண்டியிருக்கிறது. அந்த சென்ட்டிமென்ட் என்ன? எத்தகையை விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பதையெல்லாம் தமிழ்சினிமா ஹீரோக்கள் வெட்ட வெளியில் கொட்டமடித்துப் பேசுவதை கேட்டால், அவருக்கு வழங்கப்பட்ட அத்தனை விருதுகளும் இவர்களை சேர்ந்து நின்று சபிக்கும்.

போகட்டும்… இன்றைய நிலவரம் என்ன? இன்று காலை சிவாஜி சிலை அமைந்திருக்கும் காமராஜர் சாலைக்கு நேரில் வந்த அஜய் ரத்னம், பொன்வண்ணன் மற்றும் சிலர், அண்ணாரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். விஷால், சூர்யா, கார்த்தி, கருணாஸ், உள்ளிட்ட நடிகர் சங்கத்தின் பிரபலங்கள் யாருமே அந்த திசையை எட்டிப்பார்க்கவில்லை. அவ்வளவு ஏன்?

சிவாஜியின் வாரிசுகளான பிரபுவோ, விக்ரம் பிரபுவோ கூட இந்த சொற்ப நபர்களுடன் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்கவில்லை என்பது பேஸ்புக் ட்விட்டரில் இன்னும் ஒரு வாரத்திற்கு பேச வேண்டிய தலைப்புச் செய்தி.

சட்டி சுட்டதடா… கை விட்டதடா… என்று அன்றே பாடிவிட்டு போய்விட்டார் நடிகர் திலகம்!

1 Comment
  1. roja says

    ஒரு விஷயத்தை பாராட்ட கத்துக்கோங்கோ

Leave A Reply

Your email address will not be published.