அடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா! சிவகார்த்திகேயன் சீற்றம்!

0

சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அது. அது சிவகார்த்திகேயன் வளர்க்கிற டைம்! படப்பிடிப்புக்காக மதுரைக்கு சென்றார் சிவா. அதே பிளைட்டில் கமல்ஹாசனும் சென்றார். மதுரை ஏர்போர்ட்டில் ரசிகர்கள் திரண்டு கமல்ஹாசனை கோஷம் போட்டு வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த துரதிருஷ்டம் இது.

கூட்டத்திலிருந்த ஒரு கூன் பாண்டியன், வீணே வந்து வம்பிழுத்தான். தானுன்டு… தன் வேலையுண்டு என்று போய் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை பிடறியில் ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டான். அதற்குள் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார். அதுவும் கமல் ரசிகர் ஒருவரால் என்று செய்திகள் பரவ… நாடே அல்லோகல்லோலப்பட்டது. அதற்கப்புறம் கமல் அந்த ரசிகனை தேடிக் கண்டுபிடித்து செவுட்டுலேயே போட்டார் என்பது தனிக்கதை.

இப்போது சிவகார்த்திகேயன் தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோ. தமிழ்சினிமா ஹீரோக்கள் கோவிலாக நினைக்கும் மதுரை மண்ணுக்கு அபிஷியல் ட்ரிப் அடிக்கப் போகிறார். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘சீமராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3 ந் தேதி அந்த மண்ணில் தான் நடைபெற இருக்கிறது.

மதுரையே திருவிழாக்கோலம் காண்கிற அளவுக்கு போஸ்டர்கள். தோரணங்கள். என்று அலங்கரிக்கப் போகிறார்களாம். சென்னையிலிருந்து மிகப்பெரிய நடிகர் நடிகைகள் கூட்டம் அங்கு போய் இறங்கப் போகிறது. எல்லாரும் கூட்டமாய் கூடி கூடி சிவகார்த்திகேயனை வாழ்த்தப் போகிறார்கள்.

அடி கொடுத்த அந்த கூன் பாண்டியன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு வெந்திருப்பானே? இருக்கலாம்… இல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால், கூன் பாண்டியன்களுக்குத் தேவை கலகம்தான். கொண்டாட்டம் அல்ல!

Leave A Reply

Your email address will not be published.