மற்ற ஹீரோக்களிடமிருந்து வேறு பட்டவர் சிவகார்த்திகேயன்! -சார்லி

0

வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார் சார்லி. நடிப்பில் இத்தனை வருட அனுபவம் உள்ள சார்லி சிவகார்த்திகேயனை பாராட்டுவது அவரது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசு.

” வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன். இப்படத்தில் , திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும் , எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது.இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இயக்குனர் மோகன் ராஜா சார் , ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்’ என்று தான் கூறவேண்டும் ” என்றார் நடிகர் சார்லி.

Leave A Reply

Your email address will not be published.