நிஜமான சீமராஜா ஆர்.டி.ராஜாதான்! சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

1

நாளை வெளியாகிறது சீமராஜா. படம் பற்றி சிவகார்த்திகேயன் என்ன சொல்கிறார்?

“சீமராஜாவில் தொடக்கம் முதல் இறுதி வரை சூரி தன் இடைவிடாத காமெடியால் அதிர வைப்பார். இந்தத் திரைப்படம் நிச்சயம் ஒரு தனித்துவமான கருத்தை கொண்டு உருவாகியுள்ளது. இது தமிழ் மக்களுக்கு எந்த சூழலுக்கும் பொருத்தமானதாக இருக்கும். ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன. சீமராஜாவிலும் நம்மால் முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுக்க வேண்டும் என்று படத்தின் திரைக்கதை எழுதும் முன்பே முடிவெடுத்தோம். படத்தின் மையக்கரு கொஞ்சம் அழுத்தமாக இருப்பினும், நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன் என குடும்ப ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம்.

படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களை பற்றி சிவகார்த்திகேயன் கூறும்போது, “அது ஒரு அற்புதமான அனுபவம்’ என்று வெறும் வார்த்தைகளால் சொல்வதை விட, சீமராஜாவின் மொத்த அனுபவங்களையும் சேர்த்து வைக்க விரும்புகிறேன். குறிப்பாக, நெப்போலியன் சார், சிம்ரன் மேடம், லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, அவர்களின் நடிப்பு மற்றும் எளிமையை கண்டு வியந்தேன். உண்மையில், நான் அவர்களிடம் இருந்து சில நல்ல பண்புகளை எடுத்துக் கொண்டேன். எதிர்கால தலைமுறை நடிகர்கள் வெற்றிகரமாக செயல்பட நிச்சயமாக அந்த பண்புகள் வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

“நான் இந்த படத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு சமந்தா முன்னரே அவரது கதாபாத்திரத்திற்கு தயாராக தொடங்கி விட்டார். ஒரு முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் இடைவிடாமல் நடிக்கும் பிஸியான நேரத்திலும், இந்த படத்துக்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டதோடு, சிலம்பம் கற்றுக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று தன் நாயகி சமந்தாவை பற்றி புகழ்கிறார் சிவகார்த்திகேயன்.

படத்தில் என் கதாபாத்திரத்தின் கற்பனையான பெயர் சீமராஜா. ஆனால் உண்மையில் இந்த தலைப்பு எங்கள் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கு தான் வழங்கப்பட வேண்டும். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தையாக கூட கருதப்படலாம், ஆனால் உண்மையில், கொஞ்சம் கூட ஓய்வு எடுத்துக் கொண்டதே இல்லை. எப்போதும் விழிப்புடன் இருந்தார், சின்ன விஷயங்கள் கூட படத்தை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். இல்லையென்றால் ஒரு மாத கால சினிமா ஸ்ட்ரைக்கையும் தாண்டி, சொன்னபடி படத்தை முடித்து விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுவது சாத்தியமாகி இருக்காது” என்றார் சிவகார்த்திகேயன்.

1 Comment
  1. Perumal says

    Siva RD rajava vechu seiyaraan. Pavam Raja. Innamum Cycle, auto, bus la thaan poraaram. Sontha veedu ilaillam. Antha paavam thaam seema raja flop aayeduchu.

Leave A Reply

Your email address will not be published.