சிவகார்த்திகேயனின் பொறுப்புணர்வுக்கு ஓரு சல்யூட்!

1

ஒவ்வொரு வருடமும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவரும் போதெல்லாம், அடுத்த இரண்டு நாட்களுக்கு நாளிதழ்களை ஈர மனம் கொண்டவர்கள் பிரிக்க முடியாதளவுக்கு சாவு செய்திகள் குவிந்திருக்கும். ‘ப்ளஸ் 2 தேர்வில் பெயிலான மாணவர், விஷம் குடித்து சாவு’ என்பதில் ஆரம்பித்து விதவிதமான முறையில் மரணம் தழுவிய ஸ்டில்களாக இருக்கும். முதலில் தன்னம்பிக்கை இழக்கும் இதுபோன்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் அவசியம் என்று காலங் காலமாக கூறி வந்தாலும் இந்த வழக்கம் மாறுவதாக இல்லை.

ஆனால் “நான் சொன்னா கேட்க மாட்டான். அவனோட பேவரைட் ஸ்டார் சொன்னா கேட்பான்” என்று எத்தனையோ பெற்றோர்கள் சொல்வதுண்டு. அந்த ஸ்டார்கள் பேச வேண்டிய நேரமிது. முன்னணி நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ப்ளஸ்2 வை கடக்கிற வயதினர்தான். இந்த நேரத்தில், பரிட்சை ரிசல்ட் எப்படியிருந்தாலும் வாழ முடியும்ங்கிற நம்பிக்கையை அவங்க கொடுத்தால் போதும் என்று காத்திருக்கும் பெற்றோர்களுக்கு சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற ஹீரோக்களின் வேண்டுகோள் மனசுக்குள் பால் வார்த்திருக்கும்.

தேர்வில் தோல்வியடைஞ்ச எத்தனையோ பேர் வாழ்கையில் பெரிய பெரிய வெற்றிகளை அடைஞ்சுருக்காங்க. பெரிய புகழை குவிச்சிருக்காங்க. தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் கவலைப்படாதீங்க. தவறான முடிவுகளை எடுத்துவிட வேண்டாம் என்று ட்விட் பண்ணியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதே போல சூர்யாவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நன்றி ஹீரோக்களே…

1 Comment
  1. Samsul says

    சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உண்மையான தல தளபதி இனி சிவா தான். விஜய் அஜித்து இருவரும் அப்பாவி தமிழ் ரசிகர்களை மோத விட்டு தங்கள் கல்லாவை நிரப்பிக்கொள்கிறார்கள். இனி கவனமாக இருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.