நடிக்கக் கூடாது…! நடிப்பேன்….! நாலு கோடியை உதறிய எஸ்.ஜே.சூர்யா
‘இறைவி’ படம் சிலருக்கு சறுக்கல்! சிலருக்கு பெருக்கல்! அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவுக்குதான் ஏகப்பட்ட டிமாண்ட். அவரை முழு நேர நடிகராக்காமல் விடாது போலிருக்கிறது இன்டஸ்ட்ரி. “நான் வந்ததே ஹீரோவா நடிக்கத்தான். ஆனால் என் நேரம்… படம் டைரக்ட் பண்ண வேண்டியதாப் போச்சு” என்று பல பேட்டிகளில் கவலை தோய்ந்த சூர்யாவுக்கு, இறைவி தந்த அடையாளம், “பர்பெக்ட் நடிகன்யா இந்தாளு” என்பதுதான். என் எதிர்கால வாழ்க்கை இனி நடிப்புதான் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அவரும்.
எப்படி?
தெலுங்கில் பவன் கல்யாண் கால்ஷீட் கிடைக்காதா என்று இயக்குனர்கள் ஓவர் டைம் போட்டு அலையும் காலத்தில், வந்த வாய்ப்பை வேணாம்யா என்று உதறி தள்ளிவிட்டு வந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இத்தனைக்கும் அந்த படத்தை இயக்குவதற்கு அவருக்கு பேசப்பட்ட சம்பளம் நாலு கோடி. கமிட் ஆகும்போதே பவன் கல்யாண் ஒரு கண்டிஷன் போட்டாராம். “இந்த படத்தில் நீங்க வெறும் டைரக்டர் மட்டும்தான். கெஸ்ட் ரோலில் நானும் நடிப்பேன் என்று ஒரு சீனில் கூட முகம் காட்டக் கூடாது. அதுமட்டுமல்ல, இந்த படம் முடிந்து ரிலீஸ் ஆகிற வரைக்கும் நீங்க வேறு படங்களிலும் நடிக்கக் கூடாது” என்பதுதான் அது.
சணலை வச்சு யானையை கட்ட முடியுமா? உங்க படமே வேணாம் என்கிற முடிவுக்கு வந்தாராம் இவர். இவ்வளவு துணிச்சலான எஸ்.ஜே.சூர்யா, தன் அவ்வளவு நம்பிக்கையையும் இப்போது செல்வராகவன் இயக்குகிற படத்தில் வைத்து நடிக்க வந்திருப்பதுதான் வயிற்றை கலக்குகிறது.
தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா கைகழுவிவிட்டு வந்த படம் வேறொரு டைரக்டரை வைத்து எடுக்கப்படலாம். அது வெளியான பிறகும் கூட, ஷுட்டிங் கரெக்ஷன் என்று இழுத்தடித்துக் கொண்டிருப்பாரே?
தெரிஞ்சுதான் தலையை கொடுக்கிறீங்களா சூர்யா?