சினேகன் இமேஜை கெடுக்க இந்த ஒரு பாட்டு போதும்!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் சுக்கிர திசை சுற்றி சுற்றி அடிக்கிறது. பட வாய்ப்பே இல்லாமலிருந்த ஓவியாவை சுற்றி ஒரே கால்ஷீட் கதறல்கள். ஆரவ், ஹரிஷ்கல்யாண் போன்றவர்களுக்கும் தனி ஹீரோ அந்தஸ்து கிடைத்துவிட்டது. சினேகனுக்கு சுமார் நான்கு படங்களில் ஹீரோவாக நடிக்க அழைப்பு. இப்படி நாலாபுறத்திலிருந்து நல்ல செய்தி வருகிற நேரத்தில், இப்படியும் ஒரு அழைப்பு.

சினேகன் சார்… ஒரு பாடலுக்க ஆடணும். வர்றீங்களா? பொதுவா இந்த மாதிரி வேலைகளை ஹீரோயின்கள் செய்வார்கள். அல்லது இதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட குத்தாட்ட குமரிகள் செய்வார்கள். இதென்ன கொடுமை? சினேகனை அழைப்பது…

எஸ்.விஜயசேகரன் இயக்கும் எவனும் புத்தனில்லை படத்தில் ஒரு பாடலுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் இவர். நல்லவேளையோ, கெட்டவேளையோ… அழைப்பை மறுக்கவில்லை சினேகன். மலேசியா சென்னை ஆகிய இடங்களில் பிரமாண்ட செட்டுகளுக்கு நடுவேயும், சிலபல செட்டப்புகளுக்கு(?) நடுவேயும் இந்த பாடல் காட்சி படமாகியிருக்கிறது. கட்டிப்பிடி புகழ், சினேகன் சுமார் 200 அழகிகளை கட்டிப்பிடித்தபடி ஆடியிருக்கிறார்.

ஐயா… கவிஞரே. பார்த்து உஷாரா இருங்க. இல்லேன்னா ஆம்பள சிலுக்காக்கி ஆனந்த கூத்தாட விட்ரும் சினிமா!

Leave A Reply

Your email address will not be published.