இலங்கை தமிழர் எடுத்த வியப்பூட்டும் படம் கண்டம்!

0

Sci-fi thriller திரைப்படமான கண்டம், பண்டைய வரலாறுகளில் நாம் படித்த குமரிக் கண்டத்தின் இருப்பு தொடர்பாகவும், தமிழ் நாகாரிகத்தின் மிகத் தொன்மையான வரலாறு தொடர்பாகவும் எடுத்துக் காட்டுகின்றது. ஒரு மீனவர், ஒரு மரபியல் விஞ்ஞானி மற்றும் ஒரு மருத்துவத்துறை பேராசிரியர் ஆகியோர் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஒரு மர்மத்தைக் கண்டுபிடிக்கின்றார்கள். இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் Cloning என்பன இவர்களை ஒரு வாழ்க்கை ஓட்டப் பந்தயத்திற்கு இட்டுச் செல்கின்றன.

எழில்மிகு யாழ் மண், மற்றும் பேர்ளின் நகரம் ஆகியன இந்தத் திரைப்படத்தின் பின்னணியாக அமைந்துள்ளன. சில காட்சிகள் வெனிஸ் நகரிலும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் இந்தியா, இலங்கை, ஜேர்மனி, பிரான்ஸ், தென்னாபிரிக்கா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

கண்டம் திரைப்படத்தின் கதாநாயகன் அமித் பார்கவ். இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ நாடகத்தின் கதாநாயகன். Sinthar Athith, Jerad Noel and Pearlija Jraj ஆகிய திறமைவாய்ந்த யாழ்ப்பாணக் கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். திரைப்படத்தை Pras Lingam இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பேர்ளினைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் Arsenij Gusev. விஞ்ஞானம், சண்டை, கற்பனை, புராணம் மற்றும் வரலாறு ஆகியவற்றை இசைவாக ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட திரைப்படமே கண்டம்.

Leave A Reply

Your email address will not be published.