ஸ்ரீதேவி மறைவு! மும்பை விரைந்த ஷாலினி!

0

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே உலுக்காக உலுக்கிவிட்டது ஸ்ரீதேவியின் மறைவு. தமிழ்சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிவிட்டு பாலிவுட் போன ஸ்ரீதேவியை அங்கும் கொண்டாடியது மக்கள் மனசு. இருந்தாலும், தனது ஆஸ்தான கோடம்பாக்கத்தை விட்டு விலகாமல் தொடர்பு கொண்டிருந்தார் அவர்.

ரஜினி, கமல், விஜயகுமார் பேமிலியுடன், இன்னொரு முக்கியமான பேமிலியுடனும் ஸ்ரீதேவியின் நட்பு தொடர்ந்தது. அதுதான் அஜீத் பேமிலி. இன்னும் சொல்லப்போனால், வாரத்திற்கு ஒருமுறையாவது அஜீத்தும் சரி… ஷாலினியும் சரி. ஸ்ரீதேவியுடன் பேசிவிடுவார்களாம். இந்த மரணச் செய்தி அஜீத் குடும்பத்தை உலுக்கிவிட்டது.

நேற்றே மும்பைக்கு கிளம்பிப் போய் விட்டார் ஷாலினி. இறுதி சடங்கு முடியும் வரை அங்கேயே இருந்துவிட்டுதான் வருவாராம்.

Leave A Reply

Your email address will not be published.