கையில இருக்குது நெய்! மற்றது எல்லாம் பொய்! தூசு தட்டப்படும் கெட்டவன்

1

நரைக்கு மை பூசிவிடலாம். நுரையாய் பொங்கிக் கொண்டு நிற்கும் குறைக்கு? தனக்கென தமிழ்சினிமா மார்க்கெட்டில் ஒரு முக்கியம் இடம் இருந்தும், அதை லெப்ட் காலால் எட்டி உதைத்துக் கொண்டிருக்கும் சிம்புவை கிட்டதட்ட கைவிடுகிற சூழலுக்கு வந்துவிட்டது தமிழ்சினிமா. ட்ரிப்பிள் ஏ வந்த பின் அட்வான்ஸ் கொடுக்க காத்திருந்த ஒரு சிலரும், தலை தெறிக்க ஓடி விட்டார்கள். இந்த லட்சணத்தில், “நான் நடிக்கிறேன். நடிக்காம கூட போறேன். உங்களுக்கு என்ன? அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்கப்பா. நானே என் ரசிகர்களுக்காகதான் நடிக்கிறேன். இல்லேன்னா நடிக்கவே மாட்டேன்” என்று படு வெளிப்படையாக கூறிவிட்டார் சிம்புவும். (இந்த வீடியோதான் யூ ட்யூபின் லேட்டஸ்ட் வைரல்)

சினிமா வேண்டாம் என்று சிம்பு சொல்லிவிடலாம். ஆனால் பெரும் கனவோடு அவரை வளர்த்த அவரது குடும்பம் சொல்லுமா? எப்படியாவது சிம்புவை திருத்தி, மீண்டும் அவரை ஒரு நிலையான இடத்திற்கு கொண்டு வர நினைப்பது இயல்புதானே?

சிம்புவின் இப்போதைய மன நிலைக்கு அவரால் தினந்தோறும் சொன்ன நேரத்தில் ஷுட்டிங் வர முடியாதுதான். அதற்காக என்ன செய்ய? பல வருஷங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ‘கெட்டவன்’ படத்தின் புட்டேஜை தானே வாங்கி வைத்திருக்கிறார் டிஆர். எடிட் செய்யப்பட்ட பகுதியே 42 நிமிஷங்கள் இருக்கிறதாம். அதை அப்படியே பிளாஷ்பேக்காக வைத்துக் கொண்டு, தற்போதைய ‘ஓவர் வெயிட்’ சிம்புவையும் கொஞ்சம் கொஞ்சம் ஷுட் பண்ணி சேர்த்தால் ஒரு முழு படம் ரெடி.

இவ்வளவு கெட்ட நேரத்திற்கு அப்புறமும் சிம்புவின் மார்க்கெட் ரேட், பெரிசாக குறைந்துவிடவில்லை என்பதால், இந்த விசேஷ மாங்காயை பழுக்க வைக்கலாம் என்று நம்பி களம் இறங்கியிருக்கிறாராம் சிம்புவின் அப்பா. அதற்குள் அந்த மாங்காயை அணிலோ, நாயோ கடிக்காமலிருக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்!

1 Comment
  1. Anand says

    சிம்பு ஒரு முடிஞ்சு போன கேசு. டி ஆர் இருக்கற காசை தொலைக்கிற வேலை ஏன் சார்.

Leave A Reply

Your email address will not be published.