ஸ்டிரைக்! மீண்டும் மிரட்டும் விஷால்! குழி பறிக்கும் வேலைகள் ஸ்டார்ட்ஸ்!

0

‘நினைச்சா ஸ்டிரைக்… நினைச்சா வாபஸ்…’ என்று போராட்டங்களின் மானத்தை பெருமளவு டேமேஜ் செய்த பெருமை விஷாலுக்கு மட்டுமே உண்டு. பிற சங்கங்களை கலந்தாலோசிக்காமல் கடந்த காலங்களில் தன்னிச்சையாக அவர் அறிவித்த ஸ்டிரைக்குகள், ஆறிப்போன ரொட்டியான கதையை தமிழ்சினிமா நன்கு அறியும். ஒட்டுமொத்த இன்டஸ்ட்ரியும் சேர்ந்து குரல் கொடுக்காத விஷயங்களை எந்த அரசும் காது கொடுத்துக் கேட்பதில்லை, கேட்கப் போவதும் இல்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த நிலையில்தான் மீண்டும் தனது ஸ்ரைக் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார் விஷால். ‘வண்டி எப்.சி க்கு போயிட்டு வந்தா நல்லாயிருக்கும்ல?’ என்கிற நல்ல திட்டம்தான் இது. ஆனால் மற்றவர்கள் நிலைமை என்ன?

மார்ச் 1 ந் தேதி தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாக்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன. அவர்களோடு சேர்ந்து தமிழ்சினிமாவும் ஸ்ரைக்கில் கலந்து கொள்ளலாம் என்பது விஷாலின் முடிவு. இதற்குதான் காப்பு கட்டி கடம் வாசிக்க முடிவெடுத்திருக்கிறார்கள் சினிமாவுலகத்தின் பழம் பெருச்சாளிகள். ‘அதெப்படிப்பா முடியும்?’ என்று முதல் கட்டையை போட்டிருக்கிறார்களாம்.

கேளிக்கை வரியை நீக்குவது, திருட்டு விசிடியை ஒழிப்பது, ஆன்லைன் திருட்டை அறவே விரட்டுவது என்கிற பல்வேறு நல்ல விஷயங்களை நிறைவேற்ற அரசை நிர்பந்திப்பதுதான் வேலை நிறுத்தத்தின் முதல் நோக்கம்.

சினிமாவிலிருந்து தினம் ஒரு முதல்வர் அறிவிக்கப்படுகிற இந்த கெட்ட நேரத்தில், சினிமாவுக்கு எந்த அரசுதான் நல்லது செய்யும்? நல்லாயிருக்குய்யா உங்க நம்பிக்கை?

Leave A Reply

Your email address will not be published.