லண்டனில் செட்டில் ஆகிறார் சுசித்ரா! மீதி ஷோ அங்கிருந்து லைவ்வா?

0

அஜீத் விஜய் படங்களை கூட அப்படி எதிர்பார்த்திருப்பார்களா தெரியாது? சுசிலீக்ஸ் படங்களுக்குதான் கொட்ட கொட்ட முழித்திருந்தார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். (அடுத்தவங்க ரூம்ல எட்டிப் பார்க்கத்தான் அத்தனை அவசரம்)

“அப்படி வெளியான படங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருந்தது” என்று கடந்த இரண்டு நாட்களாக சொல்லி வருகிறார் சுசித்ரா. ஆனால் ஆபாசப்படங்கள் வேறு வேறு அக்கவுன்ட்டுகளில் தொடர்ந்து கொண்டேயிருப்பதால், முட்டை போட்ட கோழிகள் அத்தனையும் கவாங் கவாங் என்று கத்தியபடியும் புலம்பியபடியும் ட்விட்டரை அதிர்ச்சியோடு கண்காணித்து வருகின்றன.

சுசித்ராவின் கை மீறிப் போய்விட்டதா எல்லாம்? அந்த புகைப்படங்கள் வீடியோ கிளிப்புகள் அடங்கிய மெமரி கார்டு இப்போது எந்த நடிகரின் கையில்? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியபடி திணறி வரும் அக்கூட்டத்திற்கு ஒரு நற்செய்தி.

விரைவில் லண்டனில் செட்டில் ஆகப் போகிறாராம் சுசித்ரா. மனவியல் ரீதியான பிரச்சனைக்கு சிகிச்சை எடுக்கவும், லண்டனில் இருக்கும் தன் தங்கைக்கு துணையாக செல்லவிருப்பதாகவும் தகவல்.

கணவர் கார்த்திக்கை விவகாரத்து செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் சுசித்ரா, லண்டன் கிளம்பும் போதோ, அல்லது லண்டன் சென்ற பின்போ சில பல குண்டுகளை கொளுத்திப் போட்டால் என்னாவது என்கிற அச்சமும் இன்டஸ்ட்ரியை பிடித்து ஆட்டி வருகிறது.

வாழைப்பழத்துக்கு ஆசைப்பட்ட குரங்கு அதிலேயே வழுக்கி விழுந்த கதையா ஆகிருச்சே?

Leave A Reply

Your email address will not be published.