சின்னப்பசங்களா இருக்கானுங்களே! சுந்தர்சியை அலறவிட்ட விவேக்!

0

ஜல்லிக்கட்டு புகழ் ஆதியை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ‘ஆம்பள’ படத்தின் மூலம் மியூசிக் டைரக்டராக சினிமாவுக்குள் நுழைந்த ஹிப்ஹாப் ஆதி, இனி தமிழ்சினிமாவின் டிப் டாப் ஆதி! இவரே இயக்கி இவரே இசையமைத்து இவரே ஹீரோவாக நடிக்கும் ‘மீசைய முறுக்கு’ ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. படத்தில் இவருடன் நடித்திருக்கும் சுமார் ஒரு டஜன் நடிகர்களை நீங்கள் யு ட்யூப் சேனல்களில் பார்த்திருக்கலாம்.

“உங்களை பெரிய அளவுக்கு லாஞ்ச் பண்றேன்” என்று சுந்தர்சி சொன்னபோதும் கூட, “நான் எனக்கு தோதான அறிமுக நடிகர்களோடு டிராவல் பண்றேன்” என்றாராம் ஆதி. அதன் விளைவுதான் யு ட்யூபில் கலக்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களை உள்ளே கொண்டு வந்தது! ஆனால் படத்தில் “ஒரே ஒரு பெரிய நடிகர் எனக்கு வேணும். அவர் விவேக்” என்று ஆதி கேட்க, “ஆஹா நடக்கட்டும்” என்றாராம் சு.சி.

முழுசாக இவர்களை நம்பிய சுந்தர்சி ஷுட்டிங் நடக்கும் ஏரியா பக்கமே போகவில்லை. ஆனால் ரெண்டாம் நாளே போன் வந்ததாம் விவேக்கிடமிருந்து. “என்னஜி… கதையை கேட்டீங்களா, சின்னப்பசங்களை நம்பி இவ்ளோ பெரிய பொறுப்பை ஒப்படைச்சிருக்கீங்க. ஆனால் இவனுங்களை பார்த்தா எனக்கு அப்படி தெரியல” என்றாராம். நல்லவேளை… கொடுத்த பொறுப்பு கொடுத்ததுதான் என்று கெத்தாக இருந்துவிட்டார் சுந்தர்.

படம் முடிந்தபின் அதே விவேக், “நானும் பசங்களை என்னவோன்னு நினைச்சேன். பிரமாதப்படுத்திட்டாங்க” என்று சர்டிபிகேட் கொடுக்க, ஆவ்னி மூவிஸ் கோலாகலம் ஆகியிருக்கிறது.

“எங்களை நம்பிய சுந்தரண்ணனுக்கு எல்லாத்தையும் கலெக்ஷனா திருப்பிக் கொடுப்போம்” என்றார் ஆதி.

ஒரு ஆச்சர்யம். 2014 ல் சென்னைக்கு ஏதோவொரு நம்பிக்கையில் வந்திறங்கிய ஆதி, இன்று இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்திருப்பது அவரது தன்னம்பிக்கை மட்டுமே! விதையா விழுந்து மூணு வருஷத்துல மலையா முளைச்சுட்டாரேப்பா…!

Leave A Reply

Your email address will not be published.