த்ரிஷாவுக்கு சப்போர்ட்! நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட கமல்!

0

வில்லன்கள் ஹீரோயினுக்கு தொந்தரவு கொடுக்கும் நேரத்தில் ஆல விழுதை பிடித்துக் கொண்டு பறந்து வந்து அடிப்பார் ஹீரோ. எல்லா படத்திலும் ரிப்பீட் ஆகும் இந்த காமெடி, நேற்றும் ரிப்பீட் ஆனது. ஆனால் முடிவு மட்டும் வேற… வேற… அப்படியொரு பில்டப் கொடுக்கலாம் என்று நினைத்து ஆலமரத்தின் விழுதை பிடித்து உள்ளே குதித்த கமலுக்கு, ரத்த சகதியோடு விடை கொடுத்தது க்ளைமாக்ஸ்.

பீட்டா சப்போர்ட்டரான த்ரிஷாவை போகிற இடத்திலெல்லாம் துரத்தியடித்தார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள். காரைக்குடியில் கர்ஜனை படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய த்ரிஷா, திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்தால் அங்கும் ஆர்ப்பாட்டம். எப்படியோ சென்னைக்கு வந்து சேர்ந்தவருக்கு மேலும் அதிர்ச்சி. மிக அநாகரீகமான முறையில் ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரை தயாரித்து வெளியிட்டார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள். நடுநிலையாளர்கள் மனதை புண்படுத்துகிற வாசகங்கள் அதில் இடம் பெற்றது உண்மைதான்.

ஆனால் இதை கண்டித்து கமல் ஒரு ட்விட் போட்டார். அங்குதான் வந்தது வினை. கமலின் ட்விட்டர் பக்கத்தில் நுழைந்த ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இன்னதென்று எழுத முடியாத வார்த்தைகளால் போட்டு உலுக்கி எடுத்துவிட்டார்கள். நல்லவேளையாக நாகரீக தம்பிரான்கள் சிலர், “ஏன் காலையிலேர்ந்து அடிவாங்கிக் கிடக்கிற டைரக்டர் கவுதமன் உங்க கண்ணுக்கு தெரியலையா?” என்று கேட்க, அவசரம் அவசரமாக அவருக்கும் ஆதரவு தெரிவித்து ஒரு ட்விட் போட்டார் கமல்.

கமல் ரசிகர்களை கவலை கொள்ள வைத்த நாள்தான் நேற்றைய பொங்கல்!

போர் நடக்குற நேரத்தில் பொட்டுக்கடலை விற்கிறேன்னு உள்ளே வந்தால் என்னாகும்? கமல்ட்ட கேளுங்க சொல்லுவாரு!

Leave A Reply

Your email address will not be published.