தமிழிசையிடம் சூர்யா மன்னிப்பு!

0

கைதட்டுவதற்கு மட்டுமல்ல ரசிகர்கள். கர்ணகொடூரமாக திட்டித் தீர்க்கவும்தான் என்பதை அண்மைக்காலம் அழுத்தம் திருத்தமாக உணர்த்தி வருகிறது. அதுவும் சோஷியல் மீடியா வந்தபின், ஆளாளுக்கு வாயில் கூவத்தை குடித்து அதை வார்த்தைகளால் கொப்பளித்து வருகிறார்கள்.

விஜய்யின் படத்தை விமர்சித்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவரது ஏழு தலைமுறையையும் இழுத்து வச்சு திட்டினார்கள் விஜய் ரசிகர்கள். விஷயம் தன் காதுக்கு வந்ததும், ‘அடச்சீ… சும்மாயிருங்க’ என்று அதட்டாத குறையாக அடக்கி வைத்தார் விஜய்.

விஜய்யாவது ரசிகர்களை அடக்கி வைத்தார். ஊரே பற்றி எறிந்தாலும் வாயை திறப்பது அஜீத்தின் வழக்கமல்ல. ப்ளு சட்டையை ரத்த களறியாக்கி அந்த சட்டை சிவப்பாகுகிற வரை திட்டித் தீர்த்தார்கள். (பதிலுக்கு அவரும் திட்டித் தீர்த்தார் என்பது அடிஷனல் அட்ராசிடி)

இந்த நிலையில்தான் நீட் தேர்வு குறித்து சூர்யா எழுதிய கட்டுரை ஒன்று தமிழ் இந்து நாளிதழில் வந்தது. நாடே பாராட்டுகிற அளவுக்கு அற்புதமான கருத்துக்களால் தன் நிலையை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார் சூர்யா. இதற்கப்புறம் சூர்யா ரசிகர்கள் சும்மாயிருப்பார்களா? தமிழக பா.ஜ.க தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜனை விட்டு கிழிகிழியென கிழித்தார்கள் சோஷியால் மீடியாக்களில்.

இதனால் துணுக்குற்ற சூர்யா, தன் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். என்னவென்று? தரம் கெட்ட வார்த்தைகளால் யாரையும் விமர்சிக்கக் கூடாதென்று. அதுமட்டுமல்ல… தன் ரசிகர்களால் ஏற்பட்ட சங்கடத்திற்கு தமிழிசையிடம் வெளிப்படையான வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார்.

ஹீரோக்கள் சரியாகதான் இருக்கிறார்கள். ரசிகர்கள்தான் சரக்கடித்த குரங்குகள் போல சலம்புகிறார்கள்.

என்று மாறுமோ இது?

Leave A Reply

Your email address will not be published.