விஜய்யிடம் கதை! சூர்யாவின் வதை! தத்தளிப்பில் கொம்பன் முத்தையா?
கரண்ட் கம்பியாக இருந்தாலும், ஒரு கம்பியின் மீது உட்கார்ந்தால்தான் உயிர் பயம் இல்லாமலிருக்கும் பறவை! இன்னொரு கம்பியில் சிறகு பட்டால், என்னாகும் என்பதை கனத்த இதயத்துடன் திரியும் காகங்களை கேட்டால் தெரியும்! அப்படியொரு பறவையாகிவிட்டார் கொம்பன் முத்தையா.
குட்டிப்புலி, கொம்பன், மருது ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய முத்தையாவுக்கு மார்க்கெட் வேல்யூ நன்றாகவே இருக்கிறது. என்னதான் சாதி தழுவிய படங்களை எடுத்தாலும், அந்த குப்பையை அள்ளி வேறொரு இடத்தில் போட்டுவிட்டு அவரது திறமையை மதிக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நேரத்தில்தான் அவருக்கு வலிய அழைத்து கால்ஷீட் கொடுத்தார் சூர்யா. கதையை செதுக்கோ செதுக்கென செதுக்கிக் கொண்டிருந்தார் முத்தையா. நடுவில் விஜய் இவரை அழைத்து கதை கேட்க, இவரும் ஒரு கதையை சொல்லி அவரை அசத்திவிட்டு வந்தாராம்.
விதி வலியது. அந்த இன்னொரு கம்பியின் மீது சிறகு பட்டதால், சின்னாபின்னமாகிவிட்டது முத்தையாவின் கேரியர். தன் கம்பெனியில் இருந்து கொண்டே விஜய்க்கு கதை சொல்வதா? கடும் எரிச்சலுக்கு ஆளான சூர்யா, இப்போது முத்தையாவை கழற்றிவிட்டுவிட்டாராம்.
மூன்று கமர்ஷியல் படங்களை கொடுத்த முத்தையா, இப்போது முன்னணி ஹீரோக்கள் சிலருக்கு போன் அடித்து, “ஃப்ரியா இருந்தா ஒரு கதை கேட்கிறீங்களா?” என்கிறாராம். மறுபடியும் முதல்லேர்ந்தா…?
Kutty Puli, Maruthu ellam vetri padamaa?
Vijayellam Oru actora?