சூர்யாவா, விஜய்யா? குழப்பத்தில் கொம்பன் முத்தையா!

0

கொல்லை பக்கம் போனால் குதிரை, தெருப்பக்கம் போனால் தேர்… எதில் ஏறுவது என்பதுதான் படு குழப்பமாக இருக்கிறதாம் கொம்பன், மருது பட இயக்குனர் முத்தையாவுக்கு! இப்படி கண்ணா லட்டு திங்க ஆசையா என்பதை போல டபுள் சான்சில் சிக்கித் திளைக்கும் அவருக்கு, இப்போதைய தேவை குழப்பமே ஓடிப்போ….தான்!

சாதி சண்டை, ஊர் கலவரம், உறவு முறை குத்து வெட்டு என்று ஒரே டைப் கதைகளாக எடுத்துத்தள்ளினாலும், வசூல் விஷயத்தில் படு கில்லாடியாக இருக்கிறது கொம்பன் முத்தையாவின் படங்கள். அதனால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகளும் வரிசை கட்டுகிறது. மருதுவுக்குப் பின் விஷாலே கூட இவரை ரிப்பீட் பண்ண தயாராக இருந்த நேரத்தில்தான் முத்தையாவை கொத்தாக கொத்திக் கொண்டு போனார் சூர்யா. வேக வேகமாக போனாரே ஒழிய, குறிப்பிட்ட படத்தின் பூஜை எப்போது என்றே புரியாத நிலைமைதான் இந்த நிமிஷம் வரைக்கும்.

நடுவில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கொம்பன் முத்தையாவை அழைத்து ஒரு விறுவிறுப்பான கதையை கேட்டாராம் விஜய். கேட்ட மாத்திரத்தில் டிக் அடித்ததாகவும் தெரிகிறது. முதலில் சூர்யா படத்தை முடித்துவிட்டு விஜய் படத்திற்கு போவாரா, அல்லது விஜய் படம்தான் முதலிலா?

நமக்கு மட்டுமல்ல…. இயக்கப் போகிற முத்தையாவுக்கே இருக்கிறதாம் குழப்பம்.

To listen Audio Click below:-

Leave A Reply

Your email address will not be published.