Browsing Tag

simbu

இது கழட்டிவிடும் காலம்! சிக்கலில் பீப் பாய்ஸ்?

ஒரு ஹிட் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவ்வளவு கெட்ட காலத்திலும், அவர் கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட வேலைகளில் இருந்தார் என்கிறது சில உர்ஜிதப்படுத்தாத தகவல்கள். போலீஸ் தேடாத போது அவர்…

சிம்புவுக்கு முன் ஜாமீன்! அடுத்தது என்னவாம்?

சிம்பு காத்திருந்த அந்த நல்ல செய்தி இன்று வந்துவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது. ஆனால் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன்தான் அது. “வருகிற 11 ந் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் முன் நேரில் ஆஜராக வேண்டும்.…

நட்சத்திர பலன்கள் 2016

ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன்,…

ரஜினி, விஜய் தவிர எல்லாரும்தான் கெட்ட வார்த்தை பேசுறாங்க! சிம்புவுக்கு ஆதரவாக ராதிகா கொடி!

வேடிக்கை பார்த்தவன் வேட்டியிலேயும் வெத்தலப் பாக்கு எச்சின்னு ஆகிவிடும் சில விமர்சனங்கள். அப்படிதான் ஆகிவிட்டது ராதிகா சரத்குமாரின் சிம்பு சப்போர்ட் விவகாரமும்! ஒரு டேஷ் பாடலை பாடிவிட்டு, அப்பளம் போல நொறுங்கிக் கிடக்கிறார் சிம்பு. போலீஸ்…

என்னது சிம்புவ தூக்குல போடணுமா? கலங்கி அழும் பெற்ற மனம்!

இத்தனை நாள் மவுனத்தை ஒரேயடியாக வெடித்து சிதறடித்துவிட்டார் டி.ராஜேந்தரின் உஷா. சிம்புவை பெற்ற இந்த அம்மாவின் கண்ணீரில் நிறைய வலி இருந்தாலும், அந்த வலியை ஊர் ஏற்றுக் கொள்ளுமா என்பதுதான் இப்போதைய விவாதம்! உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அவரை…

சிம்புவின் டேஷ் பாடலுக்கு ஆதரவாக ஒரு பெண் குரல்! அதுவும் முக்கியத் தொலைக்காட்சியின் நியூஸ் ரீடர்!!

தற்போது லண்டனில் இருக்கும் சரண்யா சுந்தர்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய இரு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர். சிம்புவின் அந்த ‘டேஷ்’ பாடல்…

ஏன் வழக்கு போட்டேன்? சிம்பு விவகாரத்தில் பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி விளக்கம்! (வீடியோ)

சிம்பு மீது நாடெங்கிலும் இருந்து பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பவும் நான் செய்தது சரி என்கிற மனோபாவத்திலேயே அவர் பதில் சொல்லி வருகிறார். நடந்தது தவறுதான். மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்கிற ஒரு பதிலைதான்…

சிம்பு பாடலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் முடிச்சு! நம்புதுடா உலகம்? இது நாரதர்கள் கலகம்!

‘குட் பாய்’ இமேஜ் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களெல்லாம் சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை ஓய்கிற வரைக்கும் நாலு சுவற்றுக்குள்ளேயே அடைபட்டு கிடப்பது சாலச் சிறந்தது! ஏனென்றால் மிரள்ற மாடு புடவைய கண்டுச்சா, வேட்டிய கண்டுச்சான்னு கண்டபடி யார்…

சிம்பு எந்நேரத்திலும் கைதாகலாம்! சட்டென்று மாறுது வானிலை

டேஷ் பாடலுக்கு எதிராக சிம்பு மீது தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் சிம்பு. அது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் சிம்புவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று வாதிட்டார்.…

சாவுங்கடா…

சிம்புவின் டேஷ் பாடலுக்காக தமிழகத்தின் எல்லா மூலையிலிருந்தும் எதிர்ப்புகள் குவிந்துவிட்டன. இதுவரை எட்டு வழக்குகள் சிம்பு அனிருத் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று பத்திரிகையாளர் பிஸ்மி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருவர் மீதும்…

பீப்புக்கு ஒரு ஸ்டாப் வை என் நாட்டு அதிகாரமே! -ஆர்.எஸ்.அந்தணன்

‘தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்கிற பழமொழியெல்லாம் சிம்பு அனிருத்துக்கு மட்டும் செல்லாது. செல்லவே செல்லாது! மருந்தை தேடி மற்றவர்கள் போனால், வலியைத் தேடி போகிற வழக்கம் இருக்கிறது இருவருக்கும். அந்த வழுக்கல்தான்…

பெண்களுக்கு ஆதரவாதானே பாடுனேன். அது தப்பா? சிம்பு உருக்கம்!

“அந்த டேஷ் பாடல் பெண்களுக்கு ஆதரவான பாடல்தான். அதையேன் புரிஞ்சுக்காம என் மேல் கோபப்படுறீங்க” என்று குறிப்பிட்டிருக்கிறார் சிம்பு. பல நாட்களாக விளக்கம் ஏதும் கூறாமலிருந்த சிம்பு, பா.ம.க, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகள் களத்தில்…

எப்பவுமே இப்படியா? இல்ல… இப்ப மட்டும்தான் அப்படியா?

“எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?” சமூக வலைதளங்களில் நடந்து வரும் இதுபோன்ற விவாதமே விநோதமாக இருக்கிறது! அரசியல்வாதிகள் போலில்லை, சினிமா பிரபலங்கள்! அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தாக வேண்டும் என்கிற…

அருவருப்பூட்டுகிறது…

தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், வேறொரு நிகழ்ச்சிக்கு வந்த இளையராஜாவிடம் கேட்ட ஒரு கேள்வி அவரை கடும் ஆத்திரத்திற்குள்ளாக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட நிருபரை காய்ச்சி எடுத்துவிட்டார். அவர் கேட்ட அந்த கேள்வி இதுதான். “சிம்பு அனிருத்…

கார்டன் தந்த சுதந்திரம்! வேகமெடுக்கும் போலீஸ்!

விஐபி வீட்டு பிள்ளைகளுக்கு நாலாபுறத்திலிருந்தும் சப்போர்ட் என்கிற சித்தாந்தம் சிம்பு அனிருத் விவகாரத்தில் செல்லுபடியாகாது போலிருக்கிறது. இந்த விஷயத்தில் பீப் பிரதர்ஸ்சை காப்பாற்றுவதற்காக கார்டனின் கதவை தட்டினார்களாம் இருவரது…

சிம்புவால் கவிழ்ந்த சொம்பு? விஜய் மில்டன் படத்திலிருந்து டிஆர் கல்தா!

“தன்மான சிங்கம் டிராஜேந்தரை, இப்படி அவமான சின்னம் ஆக்கிவிட்டாரே அவரது மகன்?” என்று அச்சச்சோவாகிறது கோடம்பாக்கம். பெற்ற கடமைக்காக அவரும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். இந்த நேரத்தில்தான் இப்படியொரு ஷாக். பத்து எண்றதுக்குள்ள…

வியாழன்று சென்னை திரும்பும் அனிருத்! விமான நிலையத்தில் மடக்கக் காத்திருக்கும் போலீஸ்?

சிம்பு தலைமறைவாகி சரியாக இரண்டு ராத்திரியும் மூன்று பகலும் ஓடி விட்டன. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த நிமிடத்திலிருந்தே அவரை காணவில்லை. ஒருபுறம் கோவை போலீஸ் மூலம் சம்மன் வந்தாலும், வேறு வேறு மாவட்டங்களில் அவர் மீதும் அனிருத் மீதும்…

நயன்தாராவை மிருகமாக சித்தரித்து ஒரு பாடல்! தொடரும் சிம்பு அட்ராசிட்டி!

அந்த ‘சர்ச்சைப்பாடலின்’ ஹீரோயின் நயன்தாராவா? ஹன்சிகாவா? என்பதுதான் இன்னும் புரியாத புதிர்! நல்லவேளையாக இப்போது வந்திருக்கும் இன்னொரு தகவல் மூலம் அது நயன்தாரா என்பதை அரசல் புரசலாக புரிந்து கொள்ள முடிகிறது. வேறொன்றுமில்லை... சிம்பு நடித்து…

அதுக்கு நான் இசையமைக்கலே! – அனிருத் அனிருத்துதான் இசையமைத்தார்! -டி.ஆர்

இது அடுத்த காமெடி! ‘ஆத்தோட அடிச்சுட்டு போனாலும் அத்த மகளோட போகணும்’னு முடிவெடுத்த பின்னால, போனாப் போவுதுன்னு வுடறதா? அனிருத்தையும் சேர்த்து பிடிச்சு வலிச்சுட்டாரு டி.ஆர். நேற்று அடுத்தடுத்து வந்த இருவரது அறிக்கையை படித்தவர்கள், அவங்க…