பத்ம விபூஷன்! இளையராஜாவுக்கு விழா எடுக்குமா திரையுலகம்?

1

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதை இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கி அவரை கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இதையடுத்து தமிழகத்தின் கொண்டாட்டங்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது பத்மவிபூஷன்.

இன்றும் முன்னணியில் இருக்கும் அத்தனை இசையமைப்பாளர்களின் இசைக்கூடங்களிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கிற படம், இளையராஜாவினுடையது. அந்தளவுக்கு தத்தமது மானசீக குருவாக அவரை பின் பற்றி வருகிறார்கள் அத்தனை பேரும். இந்தியாவே கூடி கொண்டாடப் பட வேண்டியவர்தான் அவர். ஆனால் தமிழ் திரையுலகம் ஒன்று கூடி அவருக்கு இன்னும் விழா எடுக்கவேயில்லை. அவ்வப்போது சிறுசிறு பாராட்டுகளோடு முடிந்து போயிருக்கின்றன அந் நிகழ்வுகள்.

இந்த முறை அவரே வேண்டாம் என்றாலும், விடாமல் பற்றி இழுத்து வந்து பட்டத்து மாலை சூட்ட வேண்டும் திரையுலகம். இளையராஜாவின் நடுநிசி நினைவுகளில் கூட எரிச்சலாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவே, ‘காற்றின் பாதை எங்கும் உந்தன் கானம்’ சென்று தங்கும் என்று பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

எதிரிகள்… உதிரிகள்… மட்டுமல்ல, அவரை உயிராக மதிப்பவர்கள் என எல்லாரும் சேர்ந்து இளையராஜாவை கொண்டாட வேண்டிய நேரமிது. கூடுங்கள் இசை சொந்தங்களே…

1 Comment
  1. Solai says

    தான் தான் இசை என்ற கர்வம் புடிச்ச ளையராஜாவுக்கு எதுக்கு விழா எடுக்கணும்? நானும் ராஜா பாட்டு கேக்குறன், என்னைக்கும் ராஜா பாட்டு பிடிக்கும். ஆனால் இளையராஜா என்ற திமிர் பிடித்த மனிதனை பிடிக்காது. குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம், நேத்து ராத்திரி, இப்படி காசுக்காக பாட்டு போட்டவர் தான?. சேரி, அவார்டு கொடுத்தா போயீ வாங்கிக்க சொல்லும். சினிமாக்காரன் விழா எடுத்து என்னவோ பண்ணட்டும். என்னை ஆளை விடுப்பா.

Leave A Reply

Your email address will not be published.