வின் ஸ்டார், கன் ஸ்டார், பவர் ஸ்டார்… இப்போ பப்ளிக் ஸ்டார்!
சூப்பர்ஸ்டாரே குழம்பிப் போகிற அளவுக்கு கோடம்பாக்கம் ஸ்டார்களால் நிரம்பி வழிகிறது. அவரவர் ரேஞ்சுக்கு மிரட்டல் விடுத்தாலும், திடீரென ஒருவரால் கவரப்பட்டு கண் கலங்குகிறான் ரசிகன். அப்படியொரு ஸ்டராக வருவாரோ, மாட்டாரோ? ஆனால் தைரியமாக என்ட்ரி ஆகியிருக்கிறார் பப்ளிக் ஸ்டார். பெயர் துரை சுதாகர்.
தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தப்பாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் இவர். கதாநாயகியாக டோனா நடித்திருக்கிறார். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இது குறித்து பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.” என்றார்.
இப்படத்திற்கு இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், பாடலாசிரியர் – விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு – ஆதம் பாவா
விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.