பிடிபட்ட தமிழ்ராக்கர்ஸ்! இவனுங்கதான் அந்த அட்மின்ஸ்!

0

‘புலி ஊருக்குள்ள வந்திருச்சு. கூண்டுல எதையாவது மாட்டி வச்சு புடிங்க…’ என்று அலறும் பொதுஜனம் போல, ‘எதையாவது செஞ்சு இந்த தமிழ் ராக்கர்சை புடிங்க’ என்ற கூக்குரல் திரையுலகத்தில் ஒலிக்காத நாளில்லை. திருடுவதையே ஒரு கவுரவ தொழிலாக அறிவிக்கிற அளவுக்கு முழு மண்டை காலி ஆசாமிகள்தான் இந்த தமிழ்ராக்கர்ஸ் குரூப். இந்த வாரம் இந்தப்படம். அடுத்த வாரம் அந்தப்படம் என்று சவால் விட்டுக் கொண்டிருந்த சூரப்புலிக்கு நேற்று செம சூடு.

இந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் என்று சொல்லக்கூடிய ஐந்து பேரை நேற்று கைது செய்துவிட்டது கேரள போலீஸ். கேரள கிரைம் பிரான்ச் ஆண்டி பைரசி செல் சூப்பர்டென்ட் B.K. பிரஷாந்த் காணி தலைமையிலான குழு இவர்களை கைது செய்தது.

பைரசி வேலைகளில் ஈடுபட்ட ஐந்து பேரும் 19 டோமையின்களிலிருந்து மாறி மாறி இந்த வேலையை செய்துவந்தனர். ஒரு விளம்பர ஏஜன்சியிடம் இவர்கள் தொடர்பில் இருப்பதை அறிந்து இவர்களை தொடர்ந்து கண்காணித்து போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர். கார்த்தி வயது 24 ( விழுப்புரம் ) , சுரேஷ் வயது 24 , பிரபு வயது 24 , ஜான்சன் வயது 30 ( திருநெல்வேலி ), மரிய ஜான் வயது 22.

Tamil Rockers.IN , Tamil Rockers.AC , Tamil Rockers.NE , Tamil Rockers.CO , Tamil Rockers.IS , Tamil Rockers.US , Tamil Rockers.RO போன்ற 19 Domainகளை இவர்கள் பயன்படுத்தி வந்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உள்ள வச்சு குமுறுங்க போலீஸ்…. இவிங்க அராஜகம் இதோடு முடியட்டும்!

Leave A Reply

Your email address will not be published.