சிம்புவை தவிர எல்லாருக்கும்…! கவுதம் சீக்ரெட்!

0

வார்த்தைக்கு நூறு முறை அண்ணே… சகோ… உறவே… என்று கழுத்தளவுக்கு அன்பை நிரப்பினாலும், பணம் என்று வந்துவிட்டால் ‘பார்றா நீ’ என்கிற அளவுக்கு குஸ்தியில் இறங்குகிற உலகம்தான் சினிமா! இங்கு நீந்தி கரையேற இரு கை கால்கள் இருந்தால் மட்டும் போதாது. சூது, வாது, சூட்சுமம், சூடம் கற்பூரம் எல்லாம் கூட வேண்டும். எப்படியோ… எல்லா வழியையும் பிரயோகித்து தன் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை வெளியிட்டு விட்டார் கவுதம் மேனன்.

படம் திரையில் ஒளிர்கிற அந்த நிமிஷம் வரைக்கும் கூட இப்படத்தில் பணியாற்றிய பலருக்கும் நம்பிக்கை இல்லையாம். அந்தளவுக்கு படுபயங்கர பஞ்சாயத்துகளை சந்தித்து வந்தார் கவுதம். இந்த பொல்லாத நேரத்தில் தானும் தன் பங்குக்கு கவுதம்மேனன் கழுத்தில் துண்டை போட்டு இறுக்காமல், பண பாக்கி விஷயத்தில் அமைதி காத்தாராம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் மட்டுமா? படத்தில் பணியாற்றிய 99 சதவீதம் பேர் அப்படியொரு ஒத்துழைப்பு கொடுத்தார்களாம்.

நினைத்திருந்தால் ‘பணத்தை செட்டில் பண்ணிட்டு படத்தை வெளியிட சொல்லுங்கோ’ என்று குறுக்கே கட்டையை போட்டிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை யாரும். தற்போதைய நிலவரம் என்ன? மோடியின் திடீர் அறிவிப்பால் முதல் நாள் தடுமாறினாலும், கலெக்ஷன் கெட்டி என்கிறார்கள்.

நல்ல செய்தி வர வர, தங்கள் பாக்கி உறுதியாக வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் டெக்னீஷியன்கள். கவுதம் என்ன செய்யப் போகிறாரோ?

பின் குறிப்பு- இந்த செய்தியில் சிம்புவை பற்றிய விவரம் எதுவும் இல்லையேப்பா… அவருக்கு மட்டும்தான் புல் செட்டில்மென்ட் முடிந்திருக்கிறதாம்!

Leave A Reply

Your email address will not be published.