விஜய் படத்துக்கு தடை! அந்த பூட்டை உடை! தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவால் சூழ்ச்சியாளர்கள் ஷாக்!

1

ஒவ்வொரு முறையும் விஜய் படங்கள் வரும்போதும் இது நொள்ளை அது நொட்டை என்று எதையாவது காரணம் சொல்லிக் கொண்டு ஒரு அரசியல் உள்ளே எட்டிப்பார்க்கும். அது தருகிற இம்சையால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகாமல் இழுக்கும். எப்படியோ கெடுபிடிகளை தாண்டி விஜய் படங்கள் வருவதும், அதை ரசிகர்கள் ஆரவாரத்தோடு வரவேற்பதும் கடந்த சில வருஷங்களாக நடந்து வரும் போராட்டம்தான். புலி வரைக்கும் கூட இந்த இம்சை தொடர்ந்ததை நாடறியும்.

இப்போது தேர்தல் வந்துவிட்டதால், அவரவர் எலக்ஷன் வேலையில் பிசியா இருப்பாங்க. நமக்கென்ன… ஒரு பிரச்சனையும் இல்லாமல் வந்துவிடலாம் என்று கணக்கு போட்ட தெறிக்கு செம லாக். தமிழ்சினிமாவின் பரந்து விரிந்த செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் தெறியை திரையிட மாட்டோம் என்று ஒரு குரூப் மல்லுக்கட்டியது. இதன் பின்னணியில் செயல்பட்டவர் பிரபல நபர் ஒருவர்தானாம். அவரது மகன் திருமணத்திற்கு ரஜினி, விஜய் இருவருக்கும் அழைப்பிதழ் வைத்தாராம். அவர்கள் நேரில் சென்று வாழ்த்தவில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் இப்படி தூண்டிவிட்டாராம் அவர்.

இவர் போட்ட ரகசிய தடையை மீறி ஒரு சில திரையரங்குகள் விஜய் படத்தை திரையிட்டது. ஆனால் பல தியேட்டர்கள் அமைதியாக இருந்துவிட்டன. இதனால் பல கோடிகள் வருமான இழப்புக்கு ஆளாகியிருக்கிறாராம் அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு.

இது ஒருபுறமிருக்க, முறையான காரணங்கள் இல்லாமல் தெறி படத்தை திரையிட மறுத்த தியேட்டர்களுக்கு விரைவில் வரப்போகும் சூர்யாவின் 24 படத்தையும், அதற்கப்புறம் வரப்போகும் ரஜினியின் கபாலி படத்தையும் தரப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். அதுமட்டுமல்ல, இன்னும் இதுபோன்ற முக்கிய ஹீரோக்களின் படங்களையும் தராமல் நிறுத்தினாலென்ன? என்று யோசித்து வருகிறார்களாம்.

இந்த அதிரடி முடிவால் ஆடிப்போயிருக்கும் மேற்படி திரையரங்க உரிமையாளர்கள் தங்களை தூண்டிவிட்டவரிடம் எகிற, “வளையலை நினைச்சு வட்டம் போட்டா, இப்படி கட்டம் கட்டமா வருதே ஸ்கெட்ச்” என்று கவலைக்குள்ளாகியிருக்கிறாராம் அவர். வினை விதைத்தவன் வினையறுப்பான் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.

1 Comment
  1. […] அந்த திருமணம் நடக்கும்போது விஜய்யும், ரஜினிகாந்தும் வெளிநாடுகளில் இருந்த காரணத்தால் அவர்களால் அவர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. இதை மனதில் வைத்து தான் அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக விஜய் நடித்த படத்தை வெளியிடுவதில் தியேட்டர் அதிபர்களை ஒருங்கிணைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளார். (இந்த விஷயத்தை நாம் முன்பே நமது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தோம். காண்க http://newtamilcinema.com/tfpc-plans-to-vijay-enemys/) […]

Leave A Reply

Your email address will not be published.