ஒரு சர்க்கரை கட்டியும், தமன்னா என்கிற தேன் புட்டியும்! இந்த கூட்டு இந்திக்காக!
தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மீது, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு கிரேஸ்! டான்ஸ் மட்டுமல்ல, நடிப்பு, இயக்கம் என்று அவர் கையிலெடுத்த எல்லா துறையிலும் சக்சஸ்! சர்க்கரை கட்டியை எறும்புகள் தேடிப் போவது இயற்கை? ஆனால் சர்க்கரை கட்டியை தேடி தேன் புட்டி தேடிப் போயிருக்கிறதே என்பதுதான் ஆஹா ஓஹோ.
பிரபுதேவா மாஸ்டருடன் நடித்தாலும் சரி, ஆடினாலும் சரி. மூவ் மென்ட் கொடுத்தே காலை ஒடித்துவிடுவார் என்ற அனுபவம் பலருக்கும் உண்டு. அதனால் மாஸ்டர்னா இஷ்டம்தான். அவர் ஆட்டம்னாதான் கஷ்டம் என்று கண்ணீர் வடிப்பார்கள் அந்த தேன் புட்டிகள்.
ஆனால் அந்த விஷயத்தில் தமன்னாவுக்கு ஆர்வம் கொப்பளித்து நிற்கிறது. அதன் விளைவாக கிரீடம் , மதராசபட்டினம் , தெய்வ திருமகள் , தலைவா உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கிய விஜய்யின் அடுத்த படத்தில் இந்த ஜோடி இணைகிறது. ஆனால் தமிழ் படமல்ல. முதல் ஹிந்தி படமாகும்.
பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபல வில்லன் நடிகர் Sonu Sood முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.ஷாரூக் கானின் ஹாப்பி நியூ இயர் திரைப்படம் மூலம் தேசிய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்றப பெயரை ஈட்டிய ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் இந்த படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார்.பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முனைவர் கே.கணேஷ் மற்றும் மும்பையை சேர்ந்த பாப் கார்ன் எண்ட்யர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
தமன்னா வெயிலில் நின்றால் தோல் பத்திரம்னு எச்சரிக்கலாம். அவர் பிரபுதேவாவுடன் நடிக்கப் போகிறாரல்லவா? பெண்ணே… கால் பத்திரம்!