கடவுள் வாழ்த்து விவகாரம் சங்கரா‘ஸாரி ’யார் என்ன செய்யணும் ?!

2

வாலு போய் கத்தி வந்தது கதையாகிவிட்டது. ஆண்டாள் பிரச்சனையில் ஆன்மீகத்துக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என்று நித்யானந்தா அண்டு கோஷ்டியும், எச் ராஜா அண்டு கோஷ்டியும் அடித்த லூட்டியும் லொள்ளும் தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டில் எழுதப்பட வேண்டிய அளவுக்கு பிரசித்தம் ஆகிவிட்டது. வடிவேலு மூத்திர சந்தில் சிக்கிய கதையாக மாட்டிக் கொண்ட வைரமுத்துவுக்கு சற்றே ரிலாக்ஸ் டைம். அந்த சந்தில் வசமாக வந்து சிக்கிக் கொண்டார் காஞ்சி மடத்தின் சாமியார் சங்கராச்சாரியார்.

உனக்கு ஒரு ஆண்டாள்னா எனக்கு ஒரு கடவுள் வாழ்த்து என்று கூட இந்த பிரச்சனையை அணுகியிருக்கலாம் சிலர். கலவரத்தில் குளிர் காய்பவர்களை விடுங்கள். நிஜமான தமிழ் ஆர்வலர்களுக்கு சங்கராச்சாரியாரின் செயல், கடும் ஆத்திரத்தை உண்டு பண்ணியிருப்பதை மறுக்கவே முடியாது.

சமஸ்கிருதத்திற்கு தமிழ் அகராதி வடித்திருக்கிறார் எச்.ராஜாவின் தந்தையார். அந்த உரையை வெளியிடும் விழா அது. அங்குதான் கடவுள் வாழ்த்து பாடும்போது தமிழக கவர்னர் பன்வாரிலால் மற்றும் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த… மிஸ்டர் சங்கராச்சாரியார் மட்டும் தனது ஸ்டூலில் இறுக ஒட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டார். எல்லாரையும் ஓரே உயிராக பார்க்க வேண்டிய துறவிக்கு எதற்கு எக்ஸ்ட்ரா ஹைட்டுடன் ஸ்டூல்? என்கிற கேள்விக்குள் நுழைந்தால் கதை கந்தலாகிவிடும் என்பதால் நிற்க.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது இறுக்கமாக உட்கார்ந்திருந்தவர், தேசிய கீதம் பாடும் போது மட்டும் அட்டன்ஷனில் நின்றதுதான் இப்போது பிரச்சனை ஆகியிருக்கிறது.

தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்திய சங்கராச்சாரியார், தமிழ் தாய் சிலை முன் நின்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்துவிட்டன. சங்கர மடம் முற்றுகையிடப்படும் என்று கிளம்பிவிட்டார்கள் பெரியாரிஸ்டுகள்.

‘சாமி அந்த நேரத்தில் தியானத்திலிருந்தார்’ என்று சப்பை கட்டு கட்டியிருக்கிறது மடம்! பொதுவிழாவுக்கு வந்த இடத்தில்தான் அந்த தியானத்தை செய்ய வேண்டுமா? அதற்கென தனியான நேரம் காலம் இல்லையா? தேசிய கீதம் பாடும்போது தியானம் கலைந்துவிட்டதா என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.

பிரச்சனை வருகிற நேரத்தில் சாமி பேசினாலும் பேசிவிடும். சங்கராச்சாரிகள் பேசுவதில்லை!

இந்த உண்மை புரிந்தும் பேய்த்தனமாக முற்றுகையிடக் கிளம்பும் பெரியாரிஸ்டுகளுக்கு இன்னும் சில நாட்கள் பொழுதுபோகும். ஏனென்றால், ‘பிராமணாள் ஓட்டல்’ என்று பெயர் வைத்தால் அதை அழிக்கச்சொல்லி அந்த கடை முன்பு மட்டும் போராடும் இவர்கள் தேவர் ஓட்டல், நாடார் மளிகை கடை பக்கமெல்லாம் போகவே மாட்டார்கள். அந்த வகையில் இந்த போராட்டத்தையும் ஒரு கை பார்க்கலாம்.

பக்தியும் போலியாகிவிட்டது. போராட்டமும் போலியாகிவிட்டது. இங்குதான் அரைகுறையாக வாழ வேண்டியிருக்கிறது அத்தனை பேரும்.

ஒன்று செய்யலாம். வைரமுத்துவும் சங்கராச்சாரியாரும் ஒரே நேரத்தில் மன்னிப்பு கேட்டு நாட்டின் ஜனநாயக தேரை ஒரே நேரத்தில் உருட்டி விடலாம்.

ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. Gnanakkirukkan says

    Umakku irundaalum kozhuppu adhikam thaan.

  2. Gnanakkirukkan says

    Ulagam potrum jagatguruvai sankarasari enru thootrum umakku koluppu seekram adangamaattumaka

Leave A Reply

Your email address will not be published.