வெற்றிகரமான 4 வது ஆண்டில் உங்கள் newtamilcinema.com வாழ வைத்த உங்களுக்கு ஜே!

2

நேற்று துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தோள் கொடுக்க, 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். செய்திகளை முந்தித்தர வேண்டும் என்கிற வேகம், அதை முறையாக வடிவமைத்துத் தருகிற நேர்த்தி, நாள் தவறாமல் புது புது செய்திகளோடு ஆஜர் என, நமது இடையறாத வேகத்திற்கு 24 மணி நேர ஆக்சிஜன் வாசர்களாகிய நீங்கள் மட்டுமே!

இந்த இனிய நேரத்தில், இணையதள உலகத்தை எனக்கு பரிச்சயமாக்கிய அமரர் ஆன்ட்டோ பீட்டரை வணங்குவதுடன், இணையத்தை வடிவமைத்து தந்த நண்பர் செல்வகுமார், விடியலின் அடையாளமாக விளங்கும் சேவலை ஓவியமாக்கிக் கொடுத்த கவிஞர் முருகன் மந்திரம், நாள்தோறும் செய்திகளை தந்துதவும் பி.ஆர்.ஓ க்கள், சக பத்திரிகையாளர்கள். திரையுலக நண்பர்கள், அனைவரையும் நன்றியோடு நினைவு கொள்கிறது www.newtamilcinema.in.

எமது அடுத்தடுத்த பாய்ச்சலுக்கு இனிமேலும் உந்துதல் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு…

உங்கள்,

ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. sandy says

    வாழ்த்துக்கள் திரு. அந்தணன்… தங்கள் பணி இனிதே தொடர….

  2. P.K. Ganesan says

    Miga viraivaka tharuvadhu mukkiam ena ninaaikkaamal tharamana, thelivana seydhigalai thaarungal. Arumaiyana ungal pani thodarattum.

    Ganesan

Leave A Reply

Your email address will not be published.