துணிச்சலான படம்! தரமணிக்கு ரஜினி ஷொட்டு!

0

ஹோம் தியேட்டர் இருக்கு. ஆனால் படம் பார்க்க மூட் இருக்கணுமே? வெளியே பெய்யும் மழையை ரசிக்கிறவர்களுக்கு மட்டும்தான் வீட்டுக்குள்ளேயும் சாரல் அடிக்கும். நேற்று அப்படியொரு சாரல் மூடுக்கு நிச்சயம் போயிருப்பார் ரஜினி. இல்லையென்றால் உடனே நம்பரை சுழற்றி தரமணி தயாரிப்பாளரை பாராட்டியிருக்க முடியுமா?

சமீபத்தில் திரைக்கு வந்து, யூத் புல்லாக ஓடிக் கொண்டிருக்கும் தரமணிக்கு நாலாபுறத்திலிருந்தும் பாராட்டும் திட்டும் சரிக்கு சமமாக வந்து கொண்டிருக்க…. ‘பேச வைத்தேன் பார்’. என்று முகமெல்லாம் புன்னகையாகிக் கிடக்கிறார் டைரக்டர் ராம். பரபரப்பான இந்த படத்தை பார்க்காவிட்டால் எப்படி? என்று ரஜினியும் தன் வீட்டு ஹோம் தியேட்டரில் படத்தை பார்த்திருக்கிறார். அதற்கப்புறம்தான் இந்த பாராட்டு.

‘தரமணி’ ஒரு துணிச்சலான படம் (Bold film)’ என்று கூறிய ரஜினி அதற்கப்புறம் படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாக பாராட்டினாராம். ‘பிசினஸ் ரீதியா படம் எப்படி போகுது?’ என்பதையும் கேட்டறிந்து கொண்டாராம். அதற்கப்புறமும் ஆர்வமாக பேசிய ரஜினி, தரமணியில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே வையும் மனமார பாராட்டினாராம்.

இவ்வளவு தகவல்களையும் சொல்லி சொல்லி சந்தோஷப்படுகிறார் ஜே.எஸ்.கே. ரஜினி வீட்டு கதவையே அசால்ட்டாக தட்டிய தரமணி படத்தை இதற்கப்புறம் விழுந்து விழுந்து எத்தனை ஹீரோக்கள் பாராட்டப் போகிறார்களோ?

Leave A Reply

Your email address will not be published.