சாயிஷா தண்ணி பார்ட்டி? ஃபுல் மப்பு! ஆட்டோக்கள் காலி!

கார் ஆக்சிடென்ட் செய்த விக்ரம் மகன்!

0


நடிகர் விக்ரமின் மகன் துருவ் இன்று அதிகாலையில் அதிவேகமாக காரில் வந்து நின்று கொண்டிருந்த ஆட்டோக்களில் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மோதிய காருக்கு முன்னும் பின்னும் சேதம். அதைவிட பெரும் சேதம் விக்ரமின் இமேஜுக்கு. அதையெல்லாம் விட பெரும் சேதம், சில அப்பாவி இளைஞர்களின் ஸ்பேர் பார்ட்ஸ்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் மூன்று ஆட்டோ டிரைவர்கள். துருவ்வையும் அவருடன் வந்திருந்த மேலும் சில இளைஞர்களையும் பிடித்து தேனாம்போட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். போதை தெளிஞ்சதும் புத்தி சொல்லி அனுப்பிராதீங்க அதிகாரிஸ். இனிமே கிளாஸ்சை கையில் எடுத்தாலே காது புளிக்கிற அளவுக்கு இருக்கணும் பனிஷ்மென்ட்.

நேற்றிரவு நடிகை சாயிஷாவின் பர்த் டே பார்ட்டி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்திருக்கிறது. அதில் ஏராளமான இளம் நடிகர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். துருவ் அங்கு சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நடந்ததா? அல்லது இது வேறு குடி பார்ட்டியா என்கிற கோணத்திலும் போலீஸ் விசாரித்து வருகிறது.

கடைசியில் யாராவது ஒரு அப்பாவி ட்ரைவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு கோர்ட்டுக்கு போனாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், சிபாரிசின் கைகள் சிறு மூளையையும் திருப்பி வைக்கும் ஆற்றல் கொண்டதாச்சே?

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.