ஆஸ்ரம் டூ அக்ரமம்…! லதாவால் நசுங்கும் ரஜினி இமேஜ்!

1

‘சிஸ்டம் சரியில்லே என்று கூறிய ரஜினி, முதலில் தன் வீட்டு சிஸ்டம் சரியா இருக்கான்னு பார்க்கணும்’! சோஷியல் மீடியாவில் நேற்றெல்லாம் அதிகம் முழங்கப்பட்ட ஒரே வாசகம் இதுவாகதான் இருக்கும்! இந்த சாட்டையடிக்கு காரணம், மிசஸ் லதா ரஜினிகாந்த். இன்று நேற்றல்ல…. பண மோசடி வழக்குகளும், இத்தகையை குற்றச்சாட்டுகளும் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டே வருகின்றன. நேற்று அதன் உச்சக்கட்டம்.

வெங்கட்ராஜலு என்பவருக்கு சொந்தமான இடத்தில் ‘தி ஆஸ்ரம்’ என்ற பள்ளியை நடத்தி வந்தார் லதா. முழுக்க முழுக்க பணக்கார வீட்டு குழந்தைகள் மட்டுமே படிக்க தகுதியுள்ள அட்மாஸ்பியர், பீஸ், மற்றும் அவுட் லுக் கொண்ட பள்ளிதான் தி ஆஸ்ரம். கடந்த பல வருஷங்களாக இந்த இடத்திற்கான வாடகையை லதா செலுத்தவே இல்லையாம். அதுவே கிட்டதட்ட 10 கோடி சேர்ந்துவிட்டது. வெங்கட்ராஜலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கப்புறம் நடுவில் பேச்சு வார்த்தைக்கு இறங்கி வந்தது இருதரப்பும். அப்போது முதல் கட்டமாக இரண்டு கோடி தருவதாக ஒப்புக் கொண்டாராம் லதா. ஆனால் அதையும் கொடுக்காமல் இழுத்தடிக்க…. தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொண்டார் வெங்கட்ராஜலு.

பள்ளியின் உட்புறத்தில் பூட்டு போட்டுவிட்டார். மீண்டும் பள்ளி திறக்கும் என்ற நம்பிக்கையில் வந்த குழந்தைகள் தெருவில் நிற்க… ஒரே பரபரப்பு. இதே ஸ்கூலில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு சம்பள பாக்கி என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது இது.

ரஜினி அரசியலுக்கு வரத்துடிக்கிற இந்த நேரம் பார்த்து இப்படி காலை வாரினால், எல்லாரும் சேர்ந்து ரஜினியின் தலையை அல்லவா வாருவார்கள்? கவுத்துட்டீங்களே பேமிலி!

(அண்மைக்காலமாக ரஜினி ஒருவர்தான் தன்னலமில்லா தலைவர் என்று முழங்கிக் கொண்டிருக்கும் தமிழருவி மணியன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)]

1 Comment
 1. இன்பச்செல்வன் says

  கிண்டியில் உள்ள ஆஸ்ரம் பள்ளி கட்டட வாடகைப் பிரச்சினை காரணமாக அப்பள்ளியின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:

  ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் சார்பில், நாங்கள் பின் வரும் இந்தத் தகவலை அளிக்கிறோம்.

  நாங்கள் கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம்.

  சமீபகாலமாக நாங்கள் குடும்ப தகராறு காரணமாக எங்கள் நில உரிமையாளரிடமிருந்து அநேக தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம்.

  இது வாடகை பற்றிய விஷயமாக மட்டும் அல்லமால், ஒரு அசாத்திய சூழ்நிலையை உருவாக்கும் பிரச்சனையாக உள்ளது. நில உரிமையாளர்கள் காரணமில்லாமலும், முறையற்ற நிலையிலும் வாடகைத் தொகையை நாங்கள் பேசிய தொகையைக் காட்டிலும் அதிகரித்துள்ளனர்.

  நாங்கள் இது குறித்து ஏற்கனவே ஆலோசித்தது மட்டுமில்லாமல் அந்த இடத்தை காலி செய்வது குறித்தும் முடிவெடுத்துள்ளோம். மேலும் இப்பிரச்சனையை முடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.

  ஊடகங்களும், பொதுமக்களும் இது போன்ற தவறான செய்திகளை நம்பாமல், உண்மையை புரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  எங்கள் ஆஸ்ரம நிறுவனத்திற்கு பள்ளி நில உரிமையாளர்கள் கொடுத்து வரும் மன உளைச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் அனைவரின் சார்பாக சட்டப்படி நடவடிக்கை மற்றும் மான நஷ்ட வழக்கும் தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  – இவ்வாறு ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.