பிரபல ஹீரோவுக்கு அடி உதை! மருத்துவமனையில் சிகிச்சை?

0

‘உயிரையே கொடுத்து நடிப்பேன். ஒரு சான்ஸ் கொடுங்க சார்…’ என்று ஆக்ஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டால் ஐயோடெக்ஸ் அமிர்தாஞ்சன் செலவே ஆயிரங்களை தொடும். ‘டெடிக்கேஷன் சார் டெடிக்கேஷன்…’ என்று உடம்பு முழுக்க அடிவாங்கி உள் காயத்தோடு நடமாடுகிற ஹீரோக்களில் சின்ன ஹீரோ பெரிய ஹீரோ வித்தியாசமே இல்லை. நல்ல மாஸ்டர் கிடைத்தால் அடியின் அளவு சற்று சுமாராக இருக்கும். அதுவே கத்துக்குட்டி மாஸ்டர் என்றால், கட்டு நிச்சயம்!

சரி விஷயத்திற்கு வருவோம்…. அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட கதைகளிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார் தினேஷ். ராஜு முருகன் இயக்கிய குக்கூவும் அதில் நடித்த தினேஷும் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடிய விஷயங்களா என்ன? அப்படிப்பட்ட தினேஷ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் விசாரணை. வெற்றி மாறன் இயக்கும் இப்படத்தை தனுஷே தயாரிக்கிறார்.

இதில்தான் தினேஷுக்கு செம அடியும் உதையும் விழுந்திருக்கிறது. வேறொன்றுமில்லை… படத்தின் கதையே லாக்கப்பில் இருக்கும் ஒருவன் விசாரணையின் போது வாங்கும் அடிகளும், அந்த அடி தாங்க முடியாமல் அவன் சொல்லும் உண்மைகளும்தான். லத்தியடியாக இருந்தாலும் சரி, விறகு கட்டை அடியாக இருந்தாலும் சரி. சினிமாவை பொறுத்தவரை அவை எதுவும் உண்மையாக இருக்காது. பஞ்சு மற்றும் தக்கைகளால் செய்யப்பட்ட கட்டைகளால்தான் தாக்குவார்கள். ஏதோ நிஜத்தில் அடி விழுந்தது போலவே துடிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட நடிகர்கள்.

ஆனால் ‘விசாரணை’யில் நடந்ததே வேறு என்கிறார்கள். ‘என்னை நிஜமாகவே அடிங்க. அப்பதான் தத்ரூபமா இருக்கும் ’ என்று கூறிவிட்டாராம் தினேஷ். அதுமட்டுமல்ல, ‘டம்மி கட்டைகளும் பயன்படுத்த தேவையில்லை’ என்று அவரே வற்புறுத்தி கேட்டுக் கொண்டாராம். வேறு வழியில்லாமல் அப்படியே செய்திருக்கிறார் வெற்றிமாறனும். அவ்வளவு அடியையும் பொறுத்துக் கொண்ட தினேஷ் ஷாட் முடிந்து சட்டையை கழற்றினால் திண்டு திண்டாக வீக்கம். ரத்தக்கட்டு வேறு….

பதறிப் போனாராம் வெற்றிமாறன். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நான்கு நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தாராம் தினேஷ். இவ்வளவு டெடிக்கேஷனா ஒரு நடிகரா? வியந்து போன தனுஷ், ‘என் நட்பு வட்டத்திலே உனக்கு ஸ்பெஷல் இடம் உண்டு’ என்று கட்டியணைத்துக் கொண்டாராம்.

(தனுஷுக்கு அடுத்த சிவகார்த்திகேயன் ரெடி!)

Leave A Reply

Your email address will not be published.