சம்பள பாக்கி! லதா ரஜினிக்கு எதிராக போராட்டம்!

0

http://bit.ly/2hfbHUX 2014 ம் வருடம் மார்ச் 20 ந் தேதி நாம் எழுதிய செய்தி ஒன்றின் லிங்க் தான் இது! நடிகரின் ஸ்கூல்… டீச்சர்களுக்கு ஆறு மாசமா சம்பளம் வரலயாம்? என்ற தலைப்பில் நாம் அப்போது எழுதிய செய்தி, இப்போதும் நிஜமாக உலவுவதுதான் வேடிக்கை. வேதனை!

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ளது தி ஆஸ்ரம் என்ற பள்ளிக்கூடம். சாஸ்திரத்துக்குக் கூட ஏழைகள் தலையை நுழைக்க முடியாத இந்த பள்ளியை சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிதான் நடத்தி வருகிறார். நாம் இந்த தகவலை வெளியிட்டு சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது அதே நிலை தொடர்ந்தால் அதை என்னவென்று சொல்வது? அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் உட்பட யாருக்கும் சரிவர சம்பளம் கொடுப்பதில்லையாம் அவர்கள். பொறுத்து பொறுத்துப் பார்த்தவர்கள், போராட்டத்தில் குதித்துவிட்டார்கள்.

1200 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் 75 டீச்சர்கள், 26 வேன் டிரைவர்கள், மற்றும் சில பணியாட்கள் வேலை செய்து வருகிறார்களாம். இவர்கள் அத்தனை பேருக்குமே சம்பள பிரச்சனை. பேச்சு வார்த்தை ஏதும் எடுபடாமல் போனதால், உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துவிட்டார்கள். நிலைமை சீரடையாததால் பள்ளி கல்வித்துறையிடம் புகார் கொடுக்க கிளம்பிவிட்டார்கள்.

ஹ்ம்… குங்குமமே நெற்றியின் அழகை கெடுத்தால், ஐயோ பாவம். அவர் என்ன செய்வார்?

Leave A Reply

Your email address will not be published.