அண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே? நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்!

1

சாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது. திருவாளர் பொதுஜனங்கள் என்று சொல்லப்படுகிற (?) ஒரு குரூப் தொடர்ந்து இந்த நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராக பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வேலை பார்த்ததன் விளைவு நேற்று அப்பட்டமாக தெரிந்தது. நட்சத்திர கிரிக்கெட் நடந்த ஸ்டேடியத்தின் உள்ளே பல கேலரிகள் காலி!

இருந்தாலும் இதையெல்லாம் எதிர்பார்த்தது போலவே உற்சாகம் குறையாமலிருந்தார்கள் அங்கு வந்திருந்த நட்சத்திரங்கள். வெகு சாதாரண நிலையிலிருக்கும் நடிகர் நடிகைகள் தொடங்கி உச்ச நடிகர் என்று வர்ணிக்கப்படும் ரஜினி வரைக்கும் அங்கு வந்ததும், மொட்டை வெயிலில் கிரிக்கெட் ஆடிய நடிகர்களை உற்சாகப்படுத்தியதும் கண்கொள்ளாக் காட்சி. ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட டாப் லிஸ்ட் ஹீரோக்களும் தவறாமல் வந்துவிட்டார்கள்.

ஆனால் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்தான் பலத்த எஸ்கேப். (அஜீத், சிம்பு, இருவரும் வர மாட்டார்கள் என்பது ஏற்கனவே முடிவான விஷயம்தான்) எப்பவோ ரிட்டையர் ஆகிவிட்ட நடிகைகள் லதா, விஜயகுமாரி, ஜோதி லட்சுமி, ஜெயமாலினி, மும்தாஜ் கூட அங்கு வந்திருந்தது ஆச்சர்யம். அதுமட்டுமல்ல, அண்டை மாநில ஹீரோக்கள் பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார், நாகார்ஜுனா, வெங்கடேஷ், ராணா, மம்முட்டி, நிவின்பாலி, சுதீப் இவர்களும் கூட வருகை தந்திருந்தார்கள். காலையில் வந்த பாலகிருஷ்ணா நிகழ்ச்சி முடியும் வரை அங்கிருந்ததெல்லாம் நிச்சயமாக பெருந்தன்மை அன்றி வேறில்லை.

எப்பவுமே வெளி மாநிலத்திலிருக்கிற ஒற்றுமையுடன், தமிழ்நாட்டை ஒப்பிட்டால் அது ‘பப்பரக்கா’ என்று பல்லை காட்டும். நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியிலும் ‘மாநில பெருமை’ மங்காத்தா ஆடியதை நினைத்தால் பெருத்த நகைப்புதான் வருகிறது.

1 Comment
  1. Roja says

    True what ever it is its’unity.
    I feel simply because ego, Nothing else.

Leave A Reply

Your email address will not be published.